மழை மாதிரி குவியுதே.. ஜப்பானுக்கு அடுத்து சென்னைதான்.. குவியும் முதலீடு.. அடடா அவங்களும் வராங்களாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கொரியாவை சேர்ந்த சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னையில் தனது முதலீட்டை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீடுகளை ஈர்க்கவும், இங்கே நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மு.க.ஸ்டாலின் மே 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார்.

அங்கிருந்து பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வர முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.

Tamil Nadu investment: Hyundai Motor India Ltd will be signing an MoU with the Government

இந்த நிலையில் இது தொடர்பான பணிகளை மேற்கொள்ளவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்கிறார்.

இந்த நிலையில்தான் தென்கொரியாவை சேர்ந்த சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னையில் தனது முதலீட்டை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அவர்களின் கிளை நிறுவனமான கியா நிறுவனம் கடந்த முறை தமிழ்நாட்டில் ஒப்பந்தம் செய்ய இருந்தது.

ஆனால் அதை தெலுங்கானா அரசு உள்ளே புகுந்து ஒப்பந்தம் செய்தது. இதனால் கடந்த ஆட்சியில் கியா தொழிற்சாலை சென்னைக்கு கிடைக்காமல் போனது. இந்த நிலையில்தான் அவர்களின் Hyundai நிறுவனம் தற்போது சென்னையில் முதலீட்டை விரிவுபடுத்த உள்ளது.

பெரும்பாலும் வாகன உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலையை Hyundai நிறுவனம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 11ம் தேதி இந்த ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

Tamil Nadu investment: Hyundai Motor India Ltd will be signing an MoU with the Government

இன்று காலைதான் ஜப்பானைச் சேர்ந்த மிட்டுபிஷி ( MITSUBISHI ELECTRIC ) நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. தமிழ்நாட்டில் ரூபாய் 1,891 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இந்த மெகா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

சென்னையில் இவர்கள் தொழிற்சாலையை அமைக்க உள்ளனர். ஏர் கண்டிஷனர் & கம்ப்ரசர் தொழிற்சாலை தொழிற்சாலை 2 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனம், ஒரு ஏசியின் வெளிப்புற அலகுகள், உட்புற அலகுகள் மற்றும் கம்பரஸர்களை ஒரே இடத்தில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. ஜப்பானிற்கு அடுத்தபடியாக
சென்னையில்தான் இப்படி எல்லா பொருட்களையும் ஒரே இடத்தில உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உருவாக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு தொடர்ந்து ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி துறையில் மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் நிலையில்தான் தற்போது இந்த முதலீடும் சென்னையில் மேற்கொள்ளப்பட உள்ளது.

Tamil Nadu investment: Hyundai Motor India Ltd will be signing an MoU with the Government

நம்பர் 1 தமிழ்நாடு : முன்னதாக தமிழ்நாடு பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும்.

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+