மோடி அலையில் தமிழகம் சிக்கவில்லை... கவிஞர் வைரமுத்து பேச்சு
சென்னை: நாடு முழுவதும் மோடியின் சுனாமி அலை பாய்ந்தாலும், அந்த அலையில் தமிழகம் சிக்கவில்லை என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக 300 க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களை தக்கவைத்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் நேரிலும், தொலைப்பேசியிலும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், மு.க.ஸ்டாலினை சந்தித்த கவிஞர் வைரமுத்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க வெற்றி என்பது தமிழர்கள் தங்களை காத்துக்கொண்ட பாதுகாப்புக் கவசம். பெரும் வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றார்.
மேலும், பாஜக திகைப்புக்குரிய வெற்றி பெற்றுள்ளது என்றும், திமுக வியப்புக்குரிய வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறிய வைரமுத்து, திமுகவின் வெற்றி திராவிட இயக்க கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த கவிஞர் வைரமுத்து, இந்தியத் திருநாடே! நல்லவர்கள் வெல்லட்டும் அல்லது வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும். அறத்தின் தீர்ப்புக்குத் தலைவணங்குவோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications