போதையின் பாதையில் தமிழ்நாடு.. பாதிக்கும் குழந்தைகள்.. என் மனதை அரிக்கிறது.. மோடி கவலை
சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் தங்குதடையின்றி கிடைக்கிறது. போதைப்பொருளால் தமிழ்நாட்டின் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். போதைப்பொருளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது பற்றி பெற்றோர்கள் அஞ்சுவது போல நானும் அஞ்சுகிறேன். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுப்பது மோடியின் உத்தரவாதம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக அரசையும் இந்தியா கூட்டணி கட்சியினரையும் கடுமையாக தாக்கி பேசினார். குடும்ப அரசியல் பற்றியும் ஊழல் செய்தவர்கள் பற்றியும் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்தார் பிரதமர் மோடி.

மோடிக்கு குடும்பம் கிடையாது என இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் என்னை வசை பாட புதிய ஃபார்முலாவை கண்டுபிடித்துள்ளனர். எனக்கு 16 வயதான போது வீட்டை துறந்து வெளியேறினேன். எதற்காக வெளியேறினேன்; எனது தேசத்திற்காக வெளியேறினேன். எனதருமை மக்களே நீங்கள்தான் என்னுடைய குடும்பம், பாரத நாட்டின் மக்கள்தான் எனது குடும்பத்தார். அவர்கள் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமானதாக்க இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகிறேன்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபட்டு வருகிறது. திமுகவின் முன்னாள் நிர்வாகிக்கு போதைப்பொருள் கடத்தலில் சிக்கியுள்ளனர். இதனைப் பற்றியும் சென்னை பொதுக்கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி.
என்னுடைய கவலை தமிழ்நாட்டை சேர்ந்த பல பெற்றோர்கள் மனதில் உள்ளது என்பது எனக்கு தெரியும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில், தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தங்கு தடையின்றி அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது என்பதுதான் எனது மனதை அரித்து எடுக்கும் கவலையாக உள்ளது.
உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இப்படிப்பட்ட கட்சி குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமானது. இன்றைய குழந்தைகள் மட்டும் அல்ல; நாளைய தலைமுறையும் இதனால் பாதிக்கப்படும். நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால் தமிழ்நாட்டின் எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடியின் கியாரண்டி என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications