நம்பர் 1 தமிழ்நாடு.. இந்தியாவிலேயே சென்னை டாப்.. எதில் தெரியுமா? மாற்றத்தை நோக்கி இளைஞர்கள்.. சபாஷ்
சென்னை: தேசிய அளவிலான தனிநபர் செலவுகள் குறித்து அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதில் தமிழ்நாடு குறித்த பிரத்யேக தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
நம்முடைய நாட்டில் தனி நபர் செலவினங்கள் குறித்த, குடும்பங்களின் நுகர்வு செலவின கணக்கெடுப்பு [Human consumption expenditure survey -HCES ] அறிக்கையாக வெளியிடப்படுவது வழக்கமாகும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு: இதுபோன்று ஆண்டுதோறும் வெளியிடப்படும், செலவின அறிக்கையானது, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தையும், அவர்களின் வறுமை நிலையையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறிய முக்கிய ஆதாரமாக உள்ளது. அந்தவகையில், 2022-23-ம் ஆண்டு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாடு குறித்தும் சில தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை இவைதான்:
"இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3773 ஆக உள்ள நிலையில் நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.26,459 ஆக உள்ளது. தனி நபர் அதிக செலவு செய்யும் பட்டியலில், சில மாநிலங்களே உள்ளன.. இதில், தமிழ்நாடும் ஒன்றாகும்.
தனிநபர் செலவினம்: கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் தனி நபர் செலவினம் நகர்ப்புறங்களில் அதிகம் உள்ளது.. இதுவே கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் அதிகம் உள்ளது.
தமிழ்நாட்டைபொறுத்தவரை, நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள்.. குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகர்ப்புறத்தில் சராசரியாக ஒருநபரின் செலவினம் ரூ.7,630 ஆகவும், கிராமப்புறத்தில் ஒரு நபரின் செலவினம் ரூ.5,310 ஆகவும் உள்ளது..
கிராமப்புற செலவு: அதாவது, தேசிய அளவில் நகர்ப்புற கிராமப்புற செலவின வித்தியாசம் 71 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் அந்த வித்தியாசம் வெறும் 44 சதவீதமாக இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது கல்விதான்.. தமிழகத்தில் நகர்ப்புறத்துக்கு ஈடாக கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களுக்கும் போதுமான அளவு கல்வி கிடைக்கிறது.. இதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.. அதனால், தமிழகத்தில் நகர்ப்புறத்துக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் தனி நபர் செலவினங்கள் உள்ளன. அதேபோல, கலாச்சார மாற்றங்களும் தனி நபர் செலவினத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆடைகள்: அந்தவகையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உடுத்தும் ஆடைகள், உண்ணும் உணவு வகைகள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை முந்தைய காலத்தில் குறைவாக இருந்தன. ஆனால், இப்போது அவர்களும் விதவிதமான ஆடைகள், உணவுகள், பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்த துவங்கவிட்டனர்.. மொத்தத்தில், இளைஞர்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாற்றத்தை கண்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்











Click it and Unblock the Notifications