பாலஸ்தீனியர்களுக்காக 1 நாள் நோன்பு நோற்போம்! தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள்!
சென்னை: பாலஸ்தீனியர்களுக்காக வரும் 26ஆம் தேதி அன்று நோன்பு நோற்குமாறு இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''ஃபலஸ்தீனை அநியாயமாக அபகரித்து தொடர்ந்து மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் இஸ்ரேலிடமிருந்து புனிதப்பள்ளிவாசல் அல் அக்ஸாவை மீட்கவும் ஃபலஸ்தீன விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடிவரும் ஃபலஸ்தீன விடுதலைப் போர் வீரர்கள் சமீபத்தில் இஸ்ரேலின் மீது தாக்குதல் தொடுத்தனர்.''
''அதன் தொடர்ச்சியாக ஃபலஸ்தீன விடுதலைப்போர் வீரர்களை தாக்குகிறோம் எனும் பெயரில் காஸாவிலுள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து கண்மூடித்தனமாக கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் மூலம் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இதுவரை ஷஹீதாகியுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் அநியாயத்தின் உச்சம்.''
''காஸாவில் வசிக்கும் நம் சகோதரர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும், தங்குமிடம், உணவு, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குக்கூட கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவது நம் நெஞ்சைப் பிளக்கிறது. இச்சமயத்தில் சர்வதேச சமுதாயத்தின் அமைதி இன்னும் கொடுமையானது.''
''பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு இறைவனின் பேருதவி கிடைத்திடவும் புனித பள்ளிவாசல் அல் - அக்ஸா மீட்புக்காகவும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் மீண்டும் வரும் 26.10.2023 வியாழன் அன்று நோன்பு நோற்று கட்டாயம் அஸர் தொழுகை முடிந்தவுடன் அதே இடத்தில் அமர்ந்து திக்ர் இஸ்திக்பார் செய்து இஃப்தார் நேரத்தில் உருக்கமாக நீண்ட துஆவைச் செய்திடுமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அன்பிற்கினிய இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவரையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.''

''இதுபற்றி உலமாப்பெருமக்கள் வரும் ஜும்ஆவிலும் அதற்குப் பின்பும் தொடர்ந்து அறிவிப்புச் செய்யுமாறும் மஸ்ஜிதுகளின் கண்ணியத்திற்குரிய நிர்வாகப்பெருமக்கள் அன்றைய தினம் இஃப்தாருக்கான ஏற்பாடுகளை அல்லாஹ்விற்காக செய்து கொடுக்குமாறும் மிகுந்த அன்புடன் வேண்டுகிறோம். இது நாம் நம் சகோதரர்களுக்குச் செய்யும் மிகக் குறைந்தபட்ச உதவியே.''
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications