ஆம்னி பஸ்களை தூக்கி சாப்பிடும் அரசு வால்வோ பஸ்கள்! எந்த ரூட்களில் இயக்கப்படும்.. டிக்கெட் எவ்வளவு!
சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்காக 20 மல்டி ஆக்சில் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் மாநிலம் முழுக்க பல்வேறு ரூட்களில் இயக்கப்பட உள்ளது. இந்தப் பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கிடையே இந்த 20 பேருந்துகள் எந்த ரூட்டில் இயக்கப்படும்.. இதற்கான கட்டணம் என்ன என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மற்ற எந்தவொரு மாநிலத்தைக் காட்டிலும் விரிவான ஒரு பேருந்து சேவையைக் கொண்ட மாநிலமான இருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஓவர்நைட்டில் சென்னைக்குச் சென்று சேரும் அளவுக்கு ஒரு விரிவான பேருந்து சேவை இருக்கிறது. இதுபோன்ற நீண்ட தூரப் பேருந்து சேவையை SETC இயக்கி வருகிறது.

பேருந்துகள்
இந்த அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்குப் புதிதாக 20 மல்டி ஆக்சில் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஏசி வசதி கொண்ட இந்த பேருந்துகள் பொதுமக்களின் பேருந்து அனுபவத்தை மொத்தமாகப் புரட்டிப் போடும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பேருந்து சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். இதற்கிடையே இந்த பேருந்துகள் எந்த வழித்தடங்களில் இயக்கப்படும்... இதற்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
அதிகபட்சம்
அதிகபட்சமாக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.1,275 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இந்த ரூட்டில் 2 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சொன்னை டூ திருச்செந்தூருக்கு ரூ.1170 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லை வரை ரூ.1054 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரூட்களிலும் தலா இரண்டு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக என்றால் சென்னை டூ சேலம் ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரூட்டில் ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல சென்னை டூ திருச்சி (2 பேருந்துகள்) ரூ.625 மற்றும் சென்னை டூ தஞ்சை (ஒரு பேருந்து) ரூ.700 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வால்வோ பேருந்துகள் இயக்கப்படும் ரூட் மற்றும் கட்டணங்கள் குறித்த முழு விவரம்
கட்டண விவரம்
- சென்னை TO மதுரை (2 பேருந்துகள்)- ₹845
- சென்னை TO திருநெல்வேலி (2 பேருந்துகள்)- ₹1,054
- சென்னை TO திருச்செந்தூர் (2 பேருந்துகள்)-₹1,170
- சென்னை TO தஞ்சாவூர் (1 பேருந்து)- ₹700
- சென்னை TO சேலம் (1 பேருந்து) - ₹600
- சென்னை TO திருப்பூர் (2 பேருந்துகள்)- ₹860
- சென்னை TO பெங்களூர் (2 பேருந்துகள்)- ரூ.735
- சென்னை TO திருச்சி (2 பேருந்துகள்)- ₹625
- சென்னை TO கோவை (2 பேருந்துகள்)- ரூ.935
- கோவை TO பெங்களூர் (2 பேருந்துகள்)- ரூ.770
- சென்னை TO நாகர்கோவில் (2 பேருந்துகள்)- ரூ. 1,275
நோட் பண்ணுங்க
சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகிறது. மேலும், சென்னை செல்லும் பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்கிறது.
முழுக்க முழுக்க குளிர்சாதன வசதியுடன் இருக்கும் இந்தப் பேருந்துகளுக்குக் கிலோமீட்டருக்கு ரூ.1.70 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எத்தனை கிமீ தூரத்திற்கு இயக்கப்படுகிறதோ.. அதற்கேற்பக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை மற்ற அரசு சொகுசு பேருந்துகளை விட சற்று அதிகம் போலத் தோன்றினாலும், உண்மையில் இது தனியார் மல்டி ஆக்சில் பேருந்துகளை விடக் குறைவு என்றே பயணிகள் சொல்கிறார்கள்.
-
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications