தமிழ்நாடு நாள்.. பட்டினி இல்லா சமூக, வறுமை ஒழிப்பில் டாப்! தேசிய சராசரியை விஞ்சிய மாநிலம்
சென்னை: மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வறுமை ஒழிப்பு, பட்டினி இல்லாத சமூகம் உள்ளிட்ட தரக்குறியீட்டில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்கிற நிதி ஆயோக் விவரங்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்து 1956ல் நவம்பர் மாதம் 1ம் தேதியன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளையே பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநில தினமாக கடைப்பிடித்து வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் வரலாறு இதிலிருந்து சற்று வேறுபட்டது. எனவேதான் இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதாவது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் பெயர் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்று இருந்தது. தமிழ் பேசும் மக்கள் கொண்ட மாநிலத்திற்கு தமிழில் பெயர் இல்லையா? எங்கள் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் வையுங்கள் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. காங்கிரஸ், சோஷலிஸ்ட் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், திமுகவினர் என பல்வேறு கட்சியினரும் இதற்காக போராடினர்.
இப்படி இருக்கையில் 1967ல் அண்ணா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த தினத்தைதான் நாம் தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகிறோம். இப்படி இருக்கையில், வறுமை ஒழிப்பு, பட்டினி இல்லாத சமூகம் உள்ளிட்ட தரக்குறியீட்டில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளின் பட்டியலில் 11ல் தமிழ்நாடு தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது.
1. வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு 92/100 - தேசிய சராசரி 72/100
2. பசியில்லா சமூகம் தமிழ்நாடு 75/100 - தேசிய சராசரி 52/100
3. நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தமிழ்நாடு 77/100 - தேசிய சராசரி 77/100
4. தரமான கல்வி தமிழ்நாடு 76/100 - தேசிய சராசரி 61/100
5. பாலின சமத்துவம் தமிழ்நாடு 53/100 - தேசிய சராசரி 49/100
6. சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் தமிழ்நாடு 90/100 - தேசிய சராசரி 89/100
7. தரமான மின்சாரம்/கேஸ் தமிழ்நாடு 100/100 - தேசிய சராசரி 96/100
8. கௌரவமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி தமிழ்நாடு 81/100 - தேசிய சராசரி 68/100
9. தொழிற்சாலை, கண்டுபிடிப்புகள், உள்கட்டமைப்புகள் தமிழ்நாடு 67/100 - தேசிய சராசரி 61/100
10. ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் தமிழ்நாடு 76/100 - தேசிய சராசரி 65/100
11. நிலையான நகரங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் தமிழ்நாடு 81/100 - தேசிய சராசரி 83/100
12. பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி தமிழ்நாடு 78/100 - தேசிய சராசரி 78/100
13. காலநிலை நடவடிக்கை தமிழ்நாடு 81/100 - தேசிய சராசரி 67/100
14. வலுவான நிறுவனங்கள், நீதி, அமைதி தமிழ்நாடு 78/100 - தேசிய சராசரி 74/100
என நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பட்டியல் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தி இந்து நாளிதழில் இன்றைய தினம் இந்த புள்ளி விவரங்கள் செய்திகளாகவும் வெளியாகியுள்ளன.
கடந்த 2020-2021ம் ஆண்டும் இதே போன்று புள்ளி விவரங்கள் வெளியாகியிருந்தது. அப்போது தமிழ்நாடு 100-க்கு 74 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது. இப்போது 4 புள்ளிகள் முன்னேறி 78 புள்ளிகளை தொட்டிருக்கிறது. வறுமை ஒழிப்பு, பட்டினி இல்லாத சமூகம், தரமான கல்வி மற்றும் நல்வாழ்வுக் குறியீடுகள், தொழில்-கட்டமைப்பு வசதி மேம்பாடு, நல்ல வேலை மற்றும் பணிச்சூழல், பாதுகாப்பான குடிநீர் விநியோகம், பொருளாதார பாகுபாடுகளை களைவது என ஐநா நிர்ணயித்துள்ள வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications