Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் இனி மழையே கிடையாதாம்.. வறண்ட வானிலை மட்டுமே நிலவும்.. காரணமே இதுதான்.. அப்ப மூடுபனி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்து வரும் சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மைய இணை இயக்குனர் விரிவான பேட்டி ஒன்றையும் தந்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாகவே, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

அதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காலை 8 மணிவரை மூடுபனி நிலவி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.. முகப்பு விளக்கையும் எரியவிட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது..

விருதாச்சலம்

விருதாச்சலம்

கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னை ஏர்போர்ட்டிலும் சில விமானங்கள் தாமதமாக வந்தடைகின்றன.. பல்வேறு விமானங்கள் பனிமூட்டத்தால் தரையிறக்க முடியாமல் தரையிறக்கப்பட்டன.. ரயில்களின் வேகமும் பனி காரணமாக குறைக்கப்பட்டுள்ளது.. சென்னை போலவே பிற மாவட்டங்களிலும் அதிகாலையில் கடும் பனி நிலவி வருகிறது... நீலகிரியில் வழக்கம்போல் பனி கொட்டிக் கொண்டே இருக்கிறது. அநேகமாக இந்த மாத இறுதிவரை இந்த தாக்கம் மெல்ல குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பனித்தாக்கம்

பனித்தாக்கம்

அதேபோல, நாகை, தஞ்சாவூர், கடலூர், விருத்தாசலம் என பல்வேறு மாவட்டங்களில் பனிப்படலங்கள் காணப்படுகின்றன. இதனால், நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு, பனி விலகிய பிறகே வாகன ஓட்டிகள் கிளம்பி செல்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் அடுத்த ஐந்து நாட்களுக்குள் பனியின் தாக்கம்‌ குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மைய இணை இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்...

மூடுபனி

மூடுபனி

அப்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மூடு பனி நிலவுவது குறித்த கேள்விக்கு, "வழக்கமாக, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மாதங்கள் என்று சொல்லுவோம்.. பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி உள்ளது. ஒரே நாளில் குறைந்தபட்ச வெப்ப நிலைக்கும் அதிகபட்ச வெப்ப நிலைக்கும் வித்தியாசம் 10 டிகிரி உள்ளது.

காற்றின் வேகம்

காற்றின் வேகம்

பகல் நேரங்களில் நீர் நிலைகளில் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாக கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம். இரவு நேரங்களில் மேகங்கள் அற்ற சூழ்நிலை இருக்கும் பொழுது வெப்பநிலை 21 டிகிரியாக மாறும்பொழுது நீர் துளிகள் காற்றில் உள்ள தூசிகளில் படிந்து காற்றின் வேகமும் இல்லாததால் இதுபோன்று மூடு பனி ஏற்பட்டு விடுகிறது.. அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவதால் இன்னும் ஐந்து நாட்களுக்குள் தமிழகத்தில் மூடு பனி குறைய வாய்ப்புள்ளது.

வெய்யில்

வெய்யில்

வெயிலை பொறுத்தவரைக்கும் தமிழகத்தை மூன்று நிலைகளாக பிரிக்கலாம். கடலோரப் பகுதிகள், உள்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகள். கடற்கரை பகுதிகளில் கடற்காற்று வீசுவதால் வெப்பநிலை குறைவாக இருக்கும். உட்புற பகுதிகளில் இந்த காற்று வீசாததால் வெப்பம் சற்று அதிகமாகவே இருக்கும். மலைப்பகுதிகளை பொறுத்தவரைக்கும் வெப்பம் இயல்புக்கு குறைவாக இருக்கும். அந்த வகையில் பார்க்கும் பொழுது பிப்ரவரி இறுதியில் வரும் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை கணித்து அறிவிக்கப்படும்" என்றார்.

வறண்ட வானிலை

வறண்ட வானிலை

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக்குறிப்பில் வெளியிட்டிருந்தது.. அதில், வரும் 12ம் தேதி வரை, அதாவது நாளை மறுநாள்வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றுக் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+