அதிமுக அலுவலகத்திற்கு நயினாரை விட்டு விட்டு போன அண்ணாமலை...பாஜக கேட்ட இடங்கள் கிடைக்குமா
அதிமுக அலுவலகத்திற்கு பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்காக வருகை தந்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கவுன்சிலர் தொகுதி வார்டு பங்கீடு தொடர்பாக அதிமுக பாஜக இடையே பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு நயினார் நாகேந்திரனை விட்டு விட்டு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர்.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
பிப்ரவரி 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். இன்னும் சில தினங்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காலக்கெடு உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. வார்டு பங்கீடு பற்றி கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கிடைக்கும் இடங்களை வைத்துதான் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும்.

அதிமுக உடன் பாஜக கூட்டணி
பாஜக நிர்வாகிகள் நேற்றைய தினம் கமலாலயத்தில் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதே போல அதிமுக அலுவலகத்திலும் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாஜகவை கூட்டணியில் இணைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

நயினார் நாகேந்திரன் பேச்சு
சில தினங்களுக்கு முன் தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்திய போது அதிமுகவிற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார் பாஜகவின் நயினார் நகேந்திரன். அதற்கு அதிமுகவினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பாஜக தலைமையகம் கமலாலயத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் நேற்றைய தினம் பங்கேற்கவில்லை.

நெல்லையில் நயினார் நாகேந்திரன்
சட்டசபை பாஜக குழு தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருக்கிறார். இடப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின்போது நயினார் நாகேந்திரன் கூட இருக்கக் கூடாது என்பது அதிமுக தலைமையிடம் இருந்து பாஜகவுக்கு வந்த கறார் கோரிக்கை என்று கூறப்படுகிறது. இதனால்தான் நயினார் நாகேந்திரன் நெல்லையிலேயே முகாம் இட்டுள்ளார்.

கார சார விவாதம்
பாஜகவின் தேர்தல் குழு நடத்திய ஆலோசனையில், அதிமுகவோடு கூட்டணியில் செல்ல வேண்டும் என்று கருத்து தெரிவித்த தலைவர்கள், அதிமுக கூட்டனியில் பிளவு ஏற்பட்டால், அது ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக இருக்கும். மேலும் திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். தனித்து போட்டியிடலாம் என்று கருத்து தெரிவித்த சில தலைவர்கள், இந்தத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டால், கட்சியின் உண்மையான வாக்கு வங்கியை நிரூபிக்க முடியும் என்றும் கூறியதாக தகவல் வெளியானது.

ஜெயக்குமார் பேட்டி
எங்களுடன் இருந்தால்தான் கூட்டணி கட்சிகளுக்கு லாபம்; இல்லாவிடில் அவர்களுக்குதான் நஷ்டம். கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அது பாஜகவிற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதப்பட்டது.

கூட்டணி பற்றி முடிவு
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக அவர்தான் முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவுடன் நேரடியாக அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை பாஜக நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.

நயினார் நாகேந்திரன் இல்லையே
இன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், சிபி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக சொன்னது போலவே வார்டு பங்கீடு பற்றி பேசுவதற்கு நயினார் நாகேந்திரனை விட்டு விட்டு சென்றுள்ளனர்.

அதிக இடங்களை கேட்கும் பாஜக
பாஜகவுக்கு சட்டசபையில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அந்த மாவட்டங்களில் உள்ள நான்கு அல்லது ஐந்து மாநகராட்சிகளைப் பெற விரும்புகிறோம். இதேபோல பாஜக வலுவாக உள்ள முக்கிய இடங்களையும் கேட்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்வாக்கு அதிகம் உள்ள கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக இடங்களை கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

10 சதவிகித இடங்கள்
கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 10 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் பாஜகவுக்கு இடங்களை அதிமுக ஒதுக்கியது. எனவே, 10 சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் வரையிலான இடங்களையே பாஜகவுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 80 சதவிகித இடங்களில் போட்டியிட அதிமுக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை












Click it and Unblock the Notifications