5 தொகுதிகளில் நாம் தமிழர் 3வது இடம்.. அனைத்து கட்சிகளுக்கும் தண்ணி காட்டும் சீமான் தம்பிகள்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் 5 தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் அதிமுக, பாமக, அமமுக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளை பின்னுக்கு தள்ளி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் திமுக 21 இடங்களிலும், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 8 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும், பாஜக கூட்டணியில் பாமக ஒரு தொகுதியிலும் முன்னிலையில் இருந்தது.
அதன்பிறகு நிலைமை மொத்தமாக மாறியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியினரே மொத்தமாக வெற்றி பெற்றனர். அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் என யாரும் வெற்றி பெறவில்லை. இதனால் மொத்தமாக தமிழகத்தை திமுக ஸ்வீப் செய்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் தோற்றார். நீலகிரி தொகுதியில் மத்திய அமைச்சர் எல் முருகன், தென்சென்னையில் போட்டியிட தமிழிசை சவுந்தரராஜன், நெல்லையில் போட்டியிட்டுள்ள நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்களும் தோற்றுப்போயினர்.
கன்னியாகுமரி லோக்சபா தேர்தல் முடிவுகள் LIVE: விஜய் வசந்த் முன்னிலை.. பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு
இந்நிலையில் தான் இந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 5 இடங்களில் 3ம் இடம் பிடித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
ஈரோடு: ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 5,62,339 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுகவின் ஆற்றல் அசோக் குமார் 3,25,773 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகம் 82,796 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் பிடித்தார். இவர் பாஜக கூட்டணி வேட்பாளரான ஜிகேவாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விஜயகுமாரை 4ம் இடத்துக்கு தள்ளினார். விஜயகுமார் மொத்தம் 77,911 ஓட்டுகளை மட்டுமே பெற்றார்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் 5,61,589 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 5,07,805 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். இங்கு நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீசன் 73,652 ஓட்டுகள் பெற்று 3ம் இடத்தை பிடித்தார். இங்கு பாஜக கூட்டணி வேட்பாளர் பாமக வேட்பாளர் தேவதாஸ் ராமசாமி 71,290 ஓட்டுகளுடன் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
திருச்சி: திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ 5,42,213 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் கருப்பையான 2,29,119 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ் 1,07,458 ஓட்டுகளுடன் 3ம் இடம் பிடித்தார். இங்கு பாஜக கூட்டணியின் அமமுக வேட்பாளர் செந்தில் நாதன் 1,00,747 ஓட்டுகளுடன் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார். இவர் 5,46,248 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 3,66,341 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர் 52,705 ஓட்டுகளுடன் 3ம் இடம் பிடித்தார். இங்கு அதிமுக வேட்பாளர் பசிலியான் 41,393 ஓட்டுகளுடன் 4ம் இடத்தில் இருந்தார்.
புதுச்சேரி: புதுச்சேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 4,26,005 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 2,89,489 ஓட்டுகளுடன் 2ம் இடம் பிடித்தார். இந்ததொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 39,603 ஓட்டுகளுடன் 3ம் இடம் பிடித்தார். இங்கு அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தன் 25,165 ஓட்டுகளுடன் 4ம் இடத்தில் பின்தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications