1.79 லட்சம் வித்தியாசம்.. கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் தோல்வி! மீண்டும் விஜய் வசந்த் வெற்றி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் வேட்பாளருமான விஜய் வசந்த் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவர் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை 2வது முறையாக வீழ்த்தி உள்ளார்.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியின் சிட்டிங் எம்பியாக காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் உள்ளார். இவர் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் மகன் ஆவார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பசிலின் நசரேத்தும், சீமானின் நாம் தமிழர் சார்பில் மரிய ஜெனிபரும் களமிறங்கி உள்ளனர்.

நாகர்கோவில் லோக்சபா தொகுதி என்ற பெயரில் 1957 முதல் 2004 வரை தேர்தல் நடந்தது. அதன்பிறகு நாகர்கோவில் லோக்சபா தொகுதி என்பது கன்னியாகுமரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2009ல் உருவான கன்னியாகுமரி லோக்சபா தொகுதி 2009, 2014, 2019 என இதுவரை 3 லோக்சபா தேர்தலையும், 2021ல் லோக்சபா இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது. இதில் 2009ல் திமுக, 2014ல் பாஜக, 2019 மற்றும் 2021 இடைத்தேர்தலில் காங்கிரசும் வென்றது.
கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமார் வென்றார். அவர் மறைந்த பிறகு 2021ல் நடந்த தேர்தலில் மகன் விஜய் வசந்த் வென்றார். இந்த தேர்தலில் 2வது முறையாக வெல்லும் முனைப்பில் அவர் உள்ளார். இந்த தொகுதியை பொறுத்தமட்டில் பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸின் விஜய் வசந்த் இடையே கடும் போட்டி உள்ளது.
அந்த வகையில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு இருப்பது விஜய் வசந்துக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. மேலும் இங்குள்ள கன்னியாகுமரி (அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம்), நாகர்கோவில் (பாஜக எம்எல்ஏ எம்ஆர் காந்தி), கொளச்சல் (காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ்), பத்மநாபபுரம் (அமைச்சர் மனோ தங்கராஜ்), கிள்ளியூர் (காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார்), விளவங்கோடு (இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது) என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது.
இதில் காங்கிரசை சேர்ந்தவர்கள் 2 தொகுதிகளிலும், திமுகவை சேர்ந்தவர் ஒரு தொகுதியிலும் எம்எல்ஏவாக உள்ளது விஜய் வசந்துக்கு பாசிட்டிவ்வாக உள்ளது. அதேபோல் பொன் ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட செல்வாக்கு, பாஜகவுக்கு தொகுதியில் உள்ள கட்டமைப்பு உள்ளிட்டவை அவருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. இதனால் இருவர் இடையே கடும் போட்டி நிலவினாலும் கூட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார். தொடர்ந்து ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல் சுற்றில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 9,547 ஓட்டுகளை பெற்றுள்ளார் விஜய் வசந்த். பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஜ்ணன் 6,219 ஓட்டுகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் பசிலியான் 1003 ஓட்டுகளுடன் 3வது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர் 897 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
அதன்பிறகு காலை 11.45 மணியளவில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்தார். காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 69,089 ஓட்டுகளை பெற்று முன்னிலை வகித்தார். பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 37,854 ஓட்டுகளை பெற்று பின்னடைவை சந்தித்தார். நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர் 5,351 ஓட்டுகள் பெற்று 3ம் இடத்தில் இருந்தார். அதிமுகவின் பசிலியான் 5,088 ஓட்டுகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதன்பிறகு மதியம் 3 மணியளவில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றியை நெருங்கி உள்ளார். மதியம் 3 மணியளவில் விஜய் வசந்த் 2 லட்சத்து 86 ஆயிரத்து 598 வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 1 லட்சத்து 62 ஆயிரத்து 704 ஓட்டுகள் பெற்று பின்னடைவை சந்தித்தார்.
மாலை 6 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 5 லட்சத்து 4 ஆயிரத்து 234 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 36 ஆயிரத்து 944 ஓட்டுகள் பெற்று பின்தங்கினார். நாம் தழிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர் 40,792 ஓட்டுகள் பெற்று 3வது இடத்தில் உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் பசிலியன் 32,285 ஓட்டுகள் பெற்று 4வது இடத்தில் நீடிக்த்தார்.
கடைசியாக காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1 லட்சத்து 79 ஆயிரத்து 907 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தமாக விஜய் வசந்த் 5,46,248 ஓட்டுகள் பெற்றார். பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 3,66,341 ஓட்டுகள் பெற்று 2ம் பெற்று தோற்றார். இந்த தொகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர் 3ம் இடம் பிடித்தார். அவர் 52,721 ஓட்டுகள் பெற்ற நிலையில் 4வது இடத்தில் இருந்த அதிமுக வேட்பாளர் பசிலியான் 41,393 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.
இதன்மூலம் கன்னியாகுமரி தொகுதியின் எம்பியாக மீண்டும் விஜய் வசந்த்தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதோடு பொன் ராதாகிருஷ்ணனை 2வது முறையாக அவர் வீழ்த்தி எம்பியாகி உள்ளார். கடந்த 2021ல் முதல் முறையாக தந்தை வசந்தகுமார் எம்பியாக இருந்தபோது நடந்த இடைத்தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தி விஜய் வசந்த் வெற்றி பெற்றார். அதன்பிறகு இப்போது 2024 பொதுத்தேர்தலில் மீண்டும் பொன் ராதாகிருஷ்ணன் காங்கிரஸின் விஜய் வசந்திடம் தோல்வியடைந்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் 2009 முதல் 2019 வரையிலான 3 லோக்சபா தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம் வருமாறு:
2009 ம் ஆண்டின் தேர்தல் முடிவுகள்
ஹெலன் டேவிட்சன் (திமுக) - 3,20,161
பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) - 2,54,474
பெல்லார்மின் (சிபிஎம்) - 85,583
ஆஸ்டின் (தேமுதிக) - 68,472
2014 ம் ஆண்டின் தேர்தல் முடிவுகள்
பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) - 3,72,906
வசந்தகுமார் (காங்கிரஸ்) - 2,44,244
ஜான் தங்கம் (அதிமுக) - 1,76,239
ராஜரத்தினம் (திமுக) - 1,17,933
2019ம் ஆண்டின் தேர்தல் முடிவுகள்
வசந்தகுமார் (காங்கிரஸ்) - 6,27,235
பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) - 3,67,302
ஜெய்தீன் (நாம் தமிழர்) - 17,069
லட்சுமணன் (அமமுக) - 12,345
2021 ம் ஆண்டின் இடைத்தேர்தல் முடிவுகள்
விஜய் வசந்த் (காங்கிரஸ்) - 5,76,037 (வெற்றி)
பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) - 4,38,087
அனிட்டர் ஆல்வின் (நாம் தமிழர்) - 58,593
சுபா சார்லஸ் (மநீம) - 8,536
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications