டவுசர் மாடல் உள்ளாடை...மது குடித்தாலும் மானத்துடன்...செல்லபாண்டியன் அழைப்பு!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகரில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் டாஸ்மாக் பிரியர்களுக்கு முககவசம் வழகங்கப்படும் என்று மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை டாஸ்மாக் பிரியர்களுக்கு செல்ல பாண்டியன் அழைப்பு!! - வீடியோ

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையிலும், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்து இருக்கும் பேட்டியிலும், ''மார்ச் மாதம் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் 144 நாட்கள் கழித்து 18/08/2020 (நாளை) அன்று திறக்கப்படுகிறது. ஆனந்த கண்ணீர் வருகிறது.

    கோயில் மூடல்

    கோயில் மூடல்

    தினந்தோறும் தமிழக முதல்வரும், டாஸ்மாக் நிர்வாகமும் தமிழக டாஸ்மாக் மதுபிரியர்களை பற்றியே சிந்தித்து நாளை கடை திறப்பற்கு உத்தரவிட்டு இருப்பது கோயில்களே மூடிக்கிடக்கும்போது குடிமகன்களுக்கு டாஸ்மாக் கடைகளை திறக்கும்போது, இதுவரை தமிழக முதல்வர்களில் ஐயா எடப்பாடிக்கு நிகரானவர்கள் யாருமில்லை 2003ல் இருந்து 2020 வரை எந்த முதல்வர்களும் மதுக்கடைகளை மூடியது இல்லை.

    உற்சாகம்

    உற்சாகம்

    குழந்தை பாக்கியம் இல்லாமல் பல கோயில்களுக்கு சென்றனர். இன்று கோயிலே மூடி இருக்கிறது. பழனி, திருப்பரங்குன்றம் என்று அலைந்தாலும், குழந்தை இல்லை. 144 நாட்கள் டாஸ்மாக் மூடி இருந்ததால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது அந்த பாக்கியம் கிடைத்துள்ளது என்ற செய்தி எங்களுக்கு கிடைத்து வருகிறது. உற்சாகத்தை கொண்டாடும் வகையில் முதல்வரின் அறிக்கை வந்துள்ளது.

    முகக்கவசம்

    முகக்கவசம்

    குழந்தை பாக்கியமும் கிடைத்துவிட்டது. ஐயாவே தொடர்ந்து ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கும் எங்களது வாரிசுகளை உருவாக்கிவிட்டோம். நாளை முதல் களத்தில் இறங்கி முகக் கவசம் அணிந்து, மூன்று மீட்டர் இடைவெளி பின்பற்றி, டவுசர் மாடல் உள்ளாடைகளை அணிந்து, கண்ணியத்துடன், மது குடித்தாலும் மானத்துடன் வாழ்ந்திட, 60% சென்னை மதுபிரியர்கள் அரசை காப்பற்ற முன் வரவேண்டும். தியாகத்துக்கு தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    டாஸ்மாக் மூடல்

    டாஸ்மாக் மூடல்

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நாளை முதல் சென்னையிலும் டாஸ்மாக் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+