தமிழக மதிய உணவு திட்டத்தால் குழந்தைகள் ஆரோக்கியம் சூப்பர்.. உ.பி, பீகார் நிலை பரிதாபம்! இதோ டேட்டா
சென்னை: காலை உணவு என்பது பலருக்கும் கனவு. வேலைக்குச் செல்லும் ஆண்களே காலை உணவை உட்கொள்ளாமல் செல்வதைப் பார்க்கிறோம். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் பலர் இதுவரை மதியச் சாப்பாட்டையே பள்ளியை எதிர்பார்த்தே செல்கிறார்கள். அவர்களுக்குக் காலை உணவு என்பது எல்லாம் பெரும்பாலும் கனவுதான்.
ஒரு மனிதனுக்கு உணவு என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அது தேவையான பருவத்தில் கிடைப்பது. அதைத்தான் 'காலை உணவுத் திட்டம்' உறுதி செய்துள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்த கேள்விகளுக்கு மருத்துவர் சென் பாலா சில விளக்கங்களை அளித்துள்ளார்.
"பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவர் நூறு வயதுவரை வாழ்கிறார் என்றால் அதில் பிரதான பங்கை வகிப்பது உணவு. அந்தக் கண்ணி அறுபடாமல் இருந்தால்தான் அவர் ஆரோக்கியமாக அவ்வளவு காலம் வாழ்ந்து வருகிறார் என்பதாக நாம் பொருள் கொள்ளலாம். இரண்டு முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தினசரி ஆயிரம் கலோரியில் இருந்து 1400 கலோரி வரை தேவைப்படும். இந்த கலோரியின் அளவு பருவ வயதை எட்டும்போது கூடும். நம் உடலுக்கு கலோரியை தரும் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு பேரூட்டச் சத்துக்களுடன் நுண் சத்துக்களான வைட்டமின், தாது உப்புக்களும் முக்கியம். இவை உடலுக்குச் சீராகக் கிடைக்காத போது உடல் பாதிக்கப்படும். சில நிரந்தர பாதிப்புகளையும் அது உண்டாக்கும்.
ஆகவேதான் மதிய உணவுத்திட்டம் என்பது குழந்தைப் பருவத்திற்கு மிகமிக அவசியமான திட்டம் என்கிறோம். இந்தக் குறைபாட்டை வராமல் இத்திட்டம் பெரிய உதவியைச் செய்கிறது.

அப்படி இத்திட்டத்தால் கிடைத்த நன்மைகள் என்ன?
இதற்கான விடையை ஹெல்த் இண்டிகேட்டர்ஸ் மூலம் நாம் பெற முடியும். Comprehensive National Nutrition Survey (2016-18) மூலம் கிடைத்துள்ள சில தரவுகள் முக்கியமானவை. இந்த ஆய்வு அறிக்கை 5 வயதிற்குக் கீழான குழந்தைகள் தங்களின் வயதிற்கேற்ற உயரத்தினை அடைத்தவர்களைப் பற்றித் தெரிவிக்கிறது. அதில் வயதுக்கு ஏற்ப உயரத்தை எட்டுபவர்கள் தமிழ்நாட்டில் 19.7 சதவீதம் உள்ளனர். அதே போல 5 முதல் 9 வயது வரை வயத்துக்கு ஏற்ற உயரத்தை எட்டாதவர்கள் தமிழ்நாட்டில் 9.7% இருக்கிறார்கள். ஆனால் இந்திய அளவில் 21.9% உள்ளனர். இந்த வேறுபாடு முக்கியமானது. இதைக் கொண்டு கணக்கிட்டால் தமிழ்நாட்டின் தரம் உயர்ந்துள்ளது என்பதைத் தனியே விளக்கத்தேவையில்லை. ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்குவதில் இந்தியாவைவிடத் தமிழகம் முன்னேறி இருக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு
அதேபோல 10 முதல் 19 வயது வரை வளரிளம் பருவத்தில் உயரத்திற்கு ஏற்ப உடல் எடை சரியாக உள்ளதா என்பதை அளவிடுவதன் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நாம் கணக்கிட முடியும். அதாவது 10 முதல் 14 வரை பிஎம்ஐ குறைவாக அல்லது மிகக் குறைவாக உள்ளவர்களின் சதவீதம் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் 21.6% ஆக அதன் அளவு உள்ளது. ஆனால் இந்தியாவில் 27.4% ஆக உள்ளது. மேலும் 15 முதல் 19 வயது வரையிலான எம் எம் ஐ குறைவாக அல்லது மிகக் குறைவாக உள்ளவர்களின் சதவிகிதம், தமிழ்நாட்டில் 18.1% ஆகவும் இந்திய அளவில் 20.0% ஆகவும் இருக்கிறது. 10 முதல் 19 வயது வரையான குறைபாடு அல்லது மிகக் குறைபாட்டின் அளவு தமிழகத்தில் 20.0 % ஆகவும் இந்திய அளவில் 24.1% ஆகவும் இருக்கிறது.

இலவசம் என ஏளனம் கூடாது
இந்தப் புள்ளிவிவரங்களை வைத்து தமிழகத்தின் மாணவ, மாணவிகளின் ஊட்டச்சத்து நிலை எந்தளவு சிறப்பாக உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதற்காகத்தான் இதனை விளக்குகிறேன்" என்கிறார் எலும்பு மற்றும் முட நீக்கியல் மருத்துவர் சென் பாலா. "இதேபோல இரும்புச்சத்து குறைபாட்டினால் வருகின்ற இரத்த சோகை நோய்த் தாக்குதல் பற்றியும் நான் சொல்ல வேண்டும். 5முதல் 9 வரையான இரத்தச் சோகை உள்ள குழந்தைகளின் சதவீதம் தமிழ்நாட்டில் 10.4 ஆக உள்ளது. இந்திய அளவில் 23.4% ஆக உள்ளது. 10 முதல் 19 வயது வரையில் ஆனவர்களின் சதவீதம் இந்திய அளவில் 28.4 ஆகவும் தமிழ்நாட்டில் 16.4% ஆகவும் உள்ளது. மேலும் பி12 குறைபாடு உள்ள குழந்தைகள் 18.9% ஆகவும் இந்தியாவில் 30.9%ஆகவும் உள்ளது. இந்த அளவுக்குத் தமிழகம் முன்னேறி இருப்பதற்கு முக்கிய பங்கைச் சத்துணவுத் திட்டம் அளித்துள்ளது. இதை எல்லாம் சுலபமாக மறுத்துவிட்டு இலவசம் எனப் பேசுவதில் அர்த்தம் இல்லை" என்கிறார்.

முட்டை வழங்கிய கருணாநிதி
1989 ஆம் ஆண்டு மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்கப்பட்டது. புரதச்சத்து குறைபாட்டை நீக்குவதில் முட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. முட்டையில் உயிர்ச்சத்துகள் அதிகம். நுண் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கும் முட்டை தீர்வாக அமைக்கிறது. இதை உணர்ந்துதான் பள்ளிகளின் முட்டையை வழங்க மு.கருணாநிதி முன்வந்தார். அதனால் கிடைத்த தன்னை என்னத் தெரியுமா? 5 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் வாரம் ஒரு முட்டையாவது உண்பவர்களின் சதவீதம் தமிழ்நாட்டில் 84.6 ஆக உள்ளது. இதே பீகாரில் 17.3% தான். உபியில் 15.2%தான். இதில் தமிழ்நாடுதான் முதலிடம். இந்த மாற்றங்கள் தானே வந்தவை இல்லை என்பது சென் பாலாவின் கருத்து.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications