சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாம் ஓவர்.. நீதிமன்றத்திலிருந்து சொந்த காரில் வீடு திரும்பிய பாலகிருஷ்ண ரெட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    தண்டனை எதிரொலி, அமைச்சர், எம்எல்ஏ பதவியையும் பறி கொடுத்தார் பாலகிருஷ்ண ரெட்டி- வீடியோ

    சென்னை: அமைச்சருக்கான காரில் சிறப்பு நீதிமன்றம் வருகை தந்த, பாலகிருஷ்ண ரெட்டி தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், தனது சொந்த காரில் வீடு திரும்பினார்.

    1998 ஆம் ஆண்டு கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், பஸ் மீது கல்லெறிந்ததாக பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    Tamil Nadu minister Balakrishna Reddy leaves his Government car

    எம்எல்ஏ, எம்பி களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதையொட்டி சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு அமைச்சருக்கான காரில் பாலகிருஷ்ண ரெட்டி வருகைதந்திருந்தார். ஆனால் நீதிபதி தனது தீர்ப்பில் பாலகிருஷ்ண ரெட்டி 3 ஆண்டு சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதித்தார்.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் உடனடியாக அவர்கள் மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.

    எனவே, எம்எல்ஏ பதவியை உடனடியாக இழந்தார் பாலகிருஷ்ண ரெட்டி. எனவே அமைச்சர் பதவியும் பறிபோனது. இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து திரும்புகையில் அமைச்சருக்கான அரசு காரை, துறந்துவிட்டு, தனது சொந்த காரில் திரும்பினார். இவர் மீதான தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்துள்ள போதிலும், பதவி பறி போனது போனது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamil Nadu minister Balakrishna Reddy who sentenced to jail for 3 years over public property destruction case by a special court in Chennai leaves his Government car and going by his own car from the court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X