தமிழ்நாடு டூ கர்நாடகா.. ஆட்டம்போட்ட வன்னி அரசு.. பதறிதோடிய இரு மாநில விலங்குகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகார துஷ்பரியோகம், மிரட்டல், லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அமைச்சர்கள் மீது வைக்கப்படுகிறது. தவெக அமைச்சர்கள் மட்டுல்லாமல் கூட்டணி அமைச்சர்களும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். காங்கிரஸ் அமைச்சர்கள் மீது ஏராளமான புகார்கள் வந்தன. அந்த வரிசையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்ற விசிக அமைச்சர் வன்னி அரசும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வன்னி அரசின் சுற்றுலா வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் வன உயிரின பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. வன்னி அரசு தன் குடும்பத்தினருடன், வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் பயணித்தார். அவருடன் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர். முதுமலை புலிகள் காடு மிகவும் அடர்த்தியானது. புலி, யானை, கரடி, சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

Vanni Arasu

சபாரி சென்ற வன்னி அரசு

காட்டு பகுதியில் சபாரி சென்ற வன்னி அரசு யானை, புலி உள்ளிட்ட வாகனங்களை பார்த்துள்ளார். இதில் அவர் உற்சமாகி காட்டுக்குள் ஓடி ஆடியுள்ளார். அரசுக்கு சொந்தமான ஜீப்பின் முன் பகுதியில் அமர்ந்து போட்டோ சூட் செய்துள்ளார். ஒருகட்டத்தில் புலிகள் காப்பகத்தில் ஒரு புலி தென்பட்டுள்ளது. காட்டுயிர்களை நேசிப்போர் கூட, அவற்றுக்கு தொந்தரவு இல்லாமல் தூரத்தில் இருந்து பார்த்து ரசித்து கடந்து செல்வார்கள்.

யானை, புலியை நோக்கி ஓடிய வன்னிஅரசு

ஆனால், வன்னி அரசு புலியை நோக்கி ஓடும் வீடியோ தான் பெரிய சர்ச்சையாகியுள்ளது. இதேபோல அவர் யானை கூட்டத்தை நோக்கியும் ஓடியுள்ளார். இது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது. ஒரு அமைச்சரே வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காட்டுயிர் ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் கூறியுள்ளனர்.

சட்ட நடவடிக்கை கோரும் ஆர்வலர்கள்

இந்நிலையில் இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடந்தது தெரியவந்துள்ளது. சாமானிய மக்கள் இப்படி செய்தால் வனத்துறை நடவடிக்கை எடுக்கும். அதேநேரத்தில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். வன்னி அரசு மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972இன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+