காவிரி நீருக்காக கட்சி பேதங்களை கடந்த தமிழக எம்.பி.க்கள்! திமுகவுடன் கரம் கோர்த்த அதிமுக -பாமக!
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, திமுகவுடன் அதிமுகவும், பாமகவும் கரம் கோர்த்திருப்பது அரசியல் களத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
காவிரி நீர் குறித்து மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் நாளை மனு கொடுக்கவுள்ளனர். அதில் எந்தெந்தக் கட்சி சார்பில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர்கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களைஅமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருடன் நாளை (18.09.2023) மாலை சந்தித்து கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள் வழங்கிடக் கோரி நேரில் சந்தித்து வலியுறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
1) டி.ஆர்.பாலு (திமுக),
2) செல்வி.எஸ்.ஜோதிமணி (இ.தே.கா),
3) முனைவர் மு.தம்பித்துரை மற்றும் என்.சந்திரசேகரன் (அஇஅதிமுக),
4) கே.சுப்பராயன் (சிபிஐ),
5) திரு.பி.ஆர்.நடராசன் (சிபிஎம்),
6) வை.கோ. (மதிமுக),
7) முனைவர் தொல் திருமாவளவன் (விசிக),
8) டாக்டர் அன்புமணி ராமதாஸ் (பாமக),
9) ஜி.கே.வாசன் (தமாகா),
10) கே.நவாஸ் கனி (இயூமுலீ)
11) ஏ.கே.பி. சின்னராஜ் (கொமதேக) ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications