உ.பி, கர்நாடகா எல்லாம் கிட்ட கூட வர முடியாது..தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் தமிழ்நாடு..மாஸ்
சென்னை: தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
தேசிய இறக்குமதி-ஏற்றுமதி தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 4.78 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. மொத்தமாக வருடம் முழுக்க 7.8 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது.

2023-24 நிதியாண்டின் 11 மாதங்களில் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி. (ஏப். 23-பிப். 24)
தமிழ்நாடு - $8.44 பில்லியன்
உத்தரப் பிரதேசம் - $3.92 பில்லியன்
கர்நாடகா - $3.80 பில்லியன்
மகாராஷ்டிரா - $2.81 பில்லியன்
குஜராத் - $2.38 பில்லியன்
டெல்லி - $1.40 பில்லியன்
ஹரியானா - $625.94 மில்லியன்
தெலுங்கானா - $564.81 மில்லியன்
இந்த எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 31% ஆகும். அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதியை $16.48 பில்லியன் ஆகும். ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது.
தமிழ்நாட்டின் 7.8 பில்லியன் டாலர் ஏற்றுமதியானதுதான் இந்தியாவில் தனி ஒரு மாநிலம் மேற்கொண்ட அதிகபட்ச ஏற்றுமதி ஆகும். 3.56 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. இதனால் உத்தர பிரதேசம் உட்பட எந்த மாநிலமும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா செய்துள்ள போஸ்டில், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
கடந்த 2022 ஆண்டு நாங்கள் 5.37 பில்லியன் மதிப்பிலான ஏற்றுமதிகளைச் செய்து இந்தியாவில் 1 ஆனோம், 2023 ஆண்டு தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி ஜனவரி 2024 வரை $7.3 பில்லியனைத் தாண்டி ஏற்கனவே உயர்ந்துள்ளது, இது 32% சதவிகித ஏற்றுமதி ஆகும். இந்தியாவில் நாம்தான் நம்பர் 1. $9 பில்லியன் மைல்கல் இப்போது எட்டக்கூடியதாகத் தெரிகிறது. அதை நாம் சாதிப்போம்.
இந்த சாதனை தேசிய பொருளாதாரத்தில் மாநிலத்தின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, தென்னிந்திய மாநிலங்கள் கூட்டாக ஏற்றுமதியில் 50% பங்களிப்பை வழங்குகின்றன. தமிழ்நாடு உற்பத்திக்கான முக்கிய இடமாகவும், நமது இளைஞர்களுக்கு உயர்தர வேலைகளை உருவாக்கும் மையமாகவும் தொடர்ந்து பிரகாசிக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் தொடர் பணிகளே இதற்கு காரணம்.
நமது தொழில் பயணத்தில் புதிய சாதனைகளைப் படைப்போம். ஒன்றாக, நாம் முன்னேறுவது மட்டுமல்ல; நாங்கள் எதிர்காலத்திற்கான அளவுகோல்களை அமைக்கிறோம் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். 3.26 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. 2.56 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் மகாராஷ்டிரா நான்காவது இடத்தில் உள்ளது. 2.13 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து இரண்டாவது வருடமாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications