நேரில் போகவே தேவையில்லையா? ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்வது எப்படி? யாருக்கெல்லாம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர "வருகையில்லா ஆவணப்பதிவு" முறை புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் நேரில் வராமலேயே இணையவழியில் பத்திரங்களை எளிதாகப் பதிவுசெய்யும் வகையில் இந்த புதிய டிஜிட்டல் நடைமுறை அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து எழும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க ஜூலை 23 அன்று சென்னையில் முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதை பற்றி பதிவுத்துறை தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tamil Nadu Property Registration Contactless Registration Registration Department Digital Property Registration

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையையும், பொதுமக்களின் சிரமமற்ற அதிவேக சேவைகளையும் உறுதிசெய்யும் நோக்கில் தொடர்ச்சியான பல்வேறு அதிநவீன சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே இணையவழியில் பத்திரங்களை பதிவு செய்யும் "வருகையில்லா ஆவணப்பதிவு" (Contactless / Presenceless Document Registration) என்ற புதிய நடைமுறை கொண்டுவரப்படுகிறது.

தமிழக பதிவுத்துறை தலைவர்

முதற்கட்டமாக, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் புதிய மனைப் பிரிவுகளின் முதல் விற்பனைப் பதிவுகளை (First Sale of Apartments and Layouts) வரும் ஆகஸ்ட் 17, 2026 முதல் கட்டாயமாக இந்த வருகையில்லா ஆவணப்பதிவு முறையிலேயே மேற்கொள்ள பத்திரப்பதிவுத் துறை திட்டமிட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் மற்ற அனைத்து வகையான சொத்து மற்றும் ஆவணப் பதிவுகளும் படிப்படியாக இந்த நவீன டிஜிட்டல் முறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.

தமிழக பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையையும், பொதுமக்களின் வசதியையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வருகையில்லா ஆவணப்பதிவு முறை

இதன் ஒரு பகுதியாக, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப் பிரிவுகளின் முதல் விற்பனையை வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் கட்டாயமாக "வருகையில்லா ஆவணப்பதிவு'' முறையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மற்ற ஆவணப் பதிவுகளும் இந்த முறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை குறித்து கட்டட விற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவும், வருகையில்லா பதிவு முறையை செயல் விளக்க காட்சி மூலம் விளக்கவும் மாபெரும் பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தலைமையில் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுமான கூட்டமைப்பின் பிரதிநிதிகள்

எனவே கட்டிட விற்பனையாளர்கள், இந்திய கட்டுமான கூட்டமைப்பின் பிரதிநிதிகள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். தங்களது கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கி இத்திட்டத்தை சிறப்பாக நடை முறைப்படுத்த தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 8300828865 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு ஆன்லைனில் ஈஸி

பதிவுத்துறை தலைவரின் இந்த அறிவிப்பானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. காரணம், "வருகையில்லா ஆவணப்பதிவு" முறையின் மூலம் பொதுமக்கள் மற்றும் ஆவணப் பதிவு செய்வோர் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில், சில நிமிடங்களில் பத்திரப் பதிவை முடித்துவிட முடியும்.

இதனால் புரோக்கர்களின் தலையீடு இருக்காமு.. லஞ்ச ஊழல் முற்றிலும் தடுக்கப்பட்டு முழுமையான வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படும்.. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சிரமமும் இருக்காது.. அலைச்சலும் தவிர்க்கப்படும்.. பொதுமக்கள் சிரமமின்றி மிக விரைவாகவும் எளிதாகவும் தங்களது சொத்துக்களைப் பதிவு செய்ய முடியும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+