டிவி விளம்பரங்களில் சிரித்த முகத்துடன்..தோன்றிய...எம்பி வசந்த குமார்... இன்று இல்லை!!
சென்னை: தொழிலதிபர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர் எம்பி வசந்தகுமார். இவர் அடிக்கடி டிவி விளம்பரங்களில் சிரித்த முகத்துடன் தோன்றுவது வழக்கம். வசந்தகுமார் என்றாலே அவரது சிரித்த முகம்தான் நினைவுக்கு வரும். இன்று இவரது உயிரிழப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
எம்பி வசந்தகுமார் 1950ஆம் ஆண்டில் ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தவர். இவர் வசந்த் & கோ மற்றும், வசந்த டிவி இரண்டையும் நடத்தி வருகிறார். இவரது வசந்த & கோ மிகவும் பிரபலம். நாங்குநேரி தொகுதியில் இருந்து கடந்த 2006, 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

பின்னர் கடந்த 2019ல் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தென் தமிழகத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்த அரசியல்வாதி.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். இனி இவரது சிரித்த முகம்தான் நினைவுக்கு வரும்.
கன்னியாகுமரியில் இருக்கும் அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர். இவரது சகோதரர்தான் குமரி ஆனந்தன். இவரது மகள்தான் தெலங்கானா ஆளுநர் தமிழசை சவுந்திரராஜன். ஏற்கனவே தனது சித்தப்பாவை பார்ப்பதற்கு தமிழிசை சென்னை வந்து இருந்தார்.












Click it and Unblock the Notifications