பவர்கட் பஞ்சாயத்து இனி இல்லை.. தமிழகத்தில் பேட்டரி ’எனர்ஜி ஸ்டோரேஜ்’ திட்டம்! அமைச்சர் குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் மின் தேவையை சமாளிக்கும் வகையில் தேவையான மின் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மின்சாரத்தை சேமித்து வைத்து, மின் தேவை அதிகரிக்கும் நேரங்களில் பயன்படுத்தும் வகையில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

TANGEDCO Electricity

அப்போது பேசிய அவர்," தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதற்கு முறையான பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததும் ஒரு காரணம். தமிழகம் முழுவதும் நாள்தோறும் சுமார் 30 ஆயிரம் மின்சாரப் புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது.

சிடிஆர் நிர்மல்குமார்

அந்தப் புகார்களுக்கு விரைவாகத் தீர்வு காணும் வகையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தும் வகையில் புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

மின் தேவை

தமிழகத்தின் மின் தேவையைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக சுமார் 26 ஆயிரம் மெகாவாட் வரை மின் தேவை ஏற்படும் நிலையில், அதனை சமாளிக்கும் வகையில் தேவையான மின் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின் பழுதுகளை சரிசெய்யும் பணிகளுக்கு பொதுமக்களும் தேவையான கால அவகாசத்தை வழங்க வேண்டும். மேலும், மின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 18 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்

அதன் மூலம் களப்பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சாரத்தை சேமித்து வைத்து, மின் தேவை அதிகரிக்கும் நேரங்களில் பயன்படுத்தும் வகையில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக இந்த வகையிலான திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மின் தேவை அதிகரிக்கும் நேரங்களில் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

மின் விநியோகம்

இந்த திட்டம் அடுத்த வாரம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். மேலும், மின் விநியோகம் இருக்கும் நிலையிலும் பழுதடைந்த நிலையில் உள்ள மின்மாற்றிகளை கண்டறிந்து மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள சுமார் 6 ஆயிரம் மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

AI தொழில்நுட்பம்

தொடர்ந்து மின்வெட்டு தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ள நிலையில், பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது, கூடுதல் பணியாளர்களை களமிறக்குவது, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகார்களை விரைவாக கையாள்வது மற்றும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+