Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

+2 தேர்வு முடிவுகள் 2024: மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி! 2478 அரசு பள்ளிகளில் 100% பாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வழக்கம் போல் மாணவர்களை விட இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில் நேற்றைய தினம் நீட் தேர்வும் நடந்து முடிந்துள்ளது.

Tamil nadu plus 2 result 2024 Girls scored more than boys this year too

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்கக்கத்தின் இயக்குநர் சேதுராமன் வெளியிட்டார்.

7.72 லட்சம் பேரில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 3,25,305 பேர் தேர்வு எழுதினர். அது போல் 3,93,890 மாணவிகள் தேர்வு எழுதினர்.

இவர்களில் மாணவர்கள் 92.37 சதவீதமும் மாணவிகள் 96.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் மொத்தமாக 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4.07 சதவீதம் மாணவியர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 91.02 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 96.7 சதவீதமும் இரு பாலர் பள்ளிகளில் 94.7 சதவீதமும் பெண்கள் பள்ளிகளில் 96.39 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் 96.35 சதவீதமும் இயற்பியல் பாடத்தில் 98.49 சதவீதமும் வேதியியலில் 99.14 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 91.30 சதவீதமும் 2020 ஆம் ஆண்டு 92.34 சதவீதமும் 2021 ஆம் ஆண்டு 100 சதவீதமும் 2022 ஆம் ஆண்டு 93.76 சதவீதமும் 2023 ஆம் ஆண்டு 94.03 சதவீதமும் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி விகிதம் உள்ளது.

ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் 100- க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 26,352 ஆகும். தமிழ் பாடத்தில் 35 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றனர்.

இயற்பியலில் 98.43 சதவீதமும் வேதியியலில் 99.14 சதவீதமும் உயிரியலில் 99.35 சதவீதமும் கணிதத்தில் 98.57 சதவீதமும் தாவரவியலில் 98.86 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+