Tamil Nadu Plus 2 exam result 2025: Digilocker-ல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றை டவுன்லோடு செய்வது எப்படி?
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் 8-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. உங்கள் மதிப்பெண் சான்றிதழை டிஜிலாக்கர் வழியாக எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.
அது போல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 30 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு மே 6-ஆம் தேதியும், 2023 ஆம் ஆண்டு மே 8ஆம் தேதியும் இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மே 6-ஆம் தேதி வாக்கில் முடிவுகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கட் ஆஃப் மதிப்பெண்களை வைத்து கல்லூரியில் சேர மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.
தாங்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து அரசு கல்லூரியா இல்லை தனியார் கல்லூரியில் டொனேஷன் கொடுத்து சேர்வதா என்பதை முடிவு செய்வர். எனவே மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை பெற DGE TN என்ற இணையத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் வரும் 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும்.
tnresults.nic.in or dge.tn.gov.in. ஆகிய வெப்சைட்டுகளில் செக் செய்ய வேண்டும். அதில் "TN HSE +2 Result 2025" அல்லது "TN SSLC Result 2025" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அப்போது ஒரு பேஜ் ஓபனாகும், அதில் தேர்வு எண்ணையும் உங்கள் பிறந்த தேதியையும் கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் வெளியாகும்.
ஒரே நேரத்தில் மாணவர்கள் அனைவரும் மேற்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிய ஆர்வம் காட்டுவர். இதனால் சர்வம் முடங்க வாய்ப்பிருக்கிறது. இதை தவிர்க்க வேகமான முடிவுகளை DigiLocker மூலமும் அறியலாம்.
முதலில் https://results.digilocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு Tamil Nadu State Board 12th Result 2025 என இடம்பெற்றிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து மாணவர்களின் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியானதும் digilocker மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதற்கு அதில் மொபைல் எண் கொண்டு பதிவு செய்ய வேண்டும். மொபைலில் டிஜிலாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அதில் Get Started என இருப்பதை கிளிக் செய்து புதிய கணக்கை Create Account தொடங்க வேண்டும். மொபைல் எண் அல்லது இமெயில் முகவரி கொண்டு ஓடிபி எண் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆதார் எண்ணை கொண்டு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். அதில் Tamil Nadu Marksheet என தேடி, அதில் பதிவு எண் , தேர்வு எழுதிய மாதம், ஆண்டு கொடுத்தால் மதிப்பெண் சான்றிதழ்கள் வந்துவிடும். அப்படியே டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications