போலீசை வசைபாடிய பேசிய பெண் வக்கீல் - யாரும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என கஸ்தூரி ட்வீட்

காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய பெண் வழக்கறிஞர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய பெண் வழக்கறிஞர் மீது தொற்றை பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், அரசின் உத்தரவை மீறுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். எந்த ஒரு மதிப்பான வழக்கறிஞரும் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள் என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வரும் சூழலில் தொற்று பரவலை மேலும் கட்டுக்குள்கொண்டு வரும் விதமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி வெளியே ஊர்சுற்றுபவர்களைப் பிடித்து காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் முகக் கவசம் அணியாமல் காரில் சென்ற பிரீத்தி என்ற பெண்ணை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதையறிந்த அந்த பெண்ணின் தாயார் தனுஜா கத்துலா, மற்றொரு சொகுசு காரில் சம்பவ இடத்திற்கு வந்து, காவல்துறையினரை கடுமையாக பேசினார்.

திட்டிய வக்கீல்

திட்டிய வக்கீல்

'நான் அட்வகேட்... உன் யூனிபார்மை கழட்ட வச்சுடுவேன் என்று சொன்னதோடு காது கூசும் அளவிற்கு ஒருமையில் திட்டினார். கொரோனா தொற்று காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் காவல்துறையினரின் மனதை புண்பட வைத்துள்ளார்.

மாஸ்க் போட முடியாது

மாஸ்க் போட முடியாது

காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண்மணி, முகக் கவசம் அணிய முடியாது, அபராதம் கட்ட இயலாது எனக் கூறி காவல்துறையினரை ஒருமையில் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. பலரும் வழக்கறிஞருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.

கொலை மிரட்டல் வழக்கு

கொலை மிரட்டல் வழக்கு

காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய பெண் வழக்கறிஞர் மீது தொற்றை பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், அரசின் உத்தரவை மீறுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

மகள் பெயர் சேர்ப்பு

மகள் பெயர் சேர்ப்பு

இந்நிலையில், ஊரடங்கை மீறி வெளியே வந்ததாக அவரது மகளான பிரீத்தி ராஜனின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் சேர்த்துள்ளனர்.

நடிகை கஸ்தூரி ட்வீட்

நடிகை கஸ்தூரி ட்வீட்

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது பதிவில், எந்த ஒரு மதிப்பான வழக்கறிஞரும் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். ஒரு பெண்ணாகவும், வழக்கறிஞராகவும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+