உள்ளே விடமாட்டோம்! செந்தில் பாலாஜி ரெய்டு! தலைமை செயலகத்தில் சிஐஎஸ்எப் படையை தடுத்த தமிழ்நாடு போலீஸ்
சென்னை: அமலாக்கத்துறையினருடன் பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் காவலர்கள் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கடந்த முறை வருமான வரித்துறை ரெய்டின் போது ரெய்டு நடக்கும் இடங்களில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக போர்கொடி தூக்கி போர்த்தடம் செய்தனர்.

முக்கியமாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட சென்ற போது பெண் அதிகாரியிடம் கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இந்த வாக்குவாதத்தில் திமுக நிர்வாகியை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கி உள்ளனர். திமுக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து.. உன் ஐடி கார்ட் காட்டு.. நீ போய் ரெய்டு பண்ணு.. ஆனா அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு போ.. உங்க வீட்டு ஆம்பளைய இப்படித்தான் அடிப்பியா, என்று கேட்டுள்ளார் கவிதா கணேசன். இதனால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரில் திமுக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் சில வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் புகார் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு போலீசிடம் தெரிவிக்காமல் வந்ததே பாதுகாப்பு குறைப்பாட்டிற்கு காரணம் என்று அப்போது திருப்பூர் எஸ்பியும் விளக்கம் கொடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த முறை மத்திய துணை ராணுவ படை வீரர்கள் கடைசி நேரத்தில் வந்து ரெய்டு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.
இந்த நிலையில் இந்த முறை முன்கூட்டியே திட்டமிட்டு.. போலீசுக்கு தெரிவிக்காமல் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த முறை போல இப்போது நடக்க கூடாது என்பதால் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர்.
தடுத்து நிறுத்தம்: இந்த நிலையில் அமலாக்கத்துறையினருடன் பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் காவலர்கள் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
செந்தில் பாலாஜி வீடுகளில் மட்டும் ரெய்டு நடத்தியது போதாது என்று தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
தலைமைச் செயலக அறையில் சோதனை செய்து வருகின்றனர். அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அமைச்சர் அலுவலகத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகளையும் அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். ரெய்டின் போது அமலாக்கத்துறையினருடன் பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் காவலர்கள் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சிஐஎஸ்எப் காவலர்களை, 6வது நுழைவாயிலில் தடுத்து நிறுத்திய தமிழ்நாடு காவல்துறை தடுத்து நிறுத்தினர். விதிப்படி அவர்கள் உள்ளே செல்ல கூடாது என்பதால்.. உள்ளே விட மாட்டோம் என்று கூறி அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications