சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், தலைநகர் சென்னையில் மொத்தம் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் 15 இடங்களில் நேரடியாகப் போட்டியிடுகிறது திமுக. இதில் எந்தெந்த சமூகங்களுக்கு வேட்பாளர் பட்டியலில் பிரநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 176 வேட்பாளர்கள் திமுகவின் சின்னமான 'உதயசூரியன்' சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளனர். திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அனைத்துக் கட்சியினருமே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Chennai dmk candidates

முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் பட்டியலில் சமூக நீதி அடிப்படையில் பல்வேறு சமூகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட செயலாளர்கள் சமூக கணக்கீட்டின்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல்களில் சாதி சமன்பாடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும், அந்தந்த தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை கட்சிகள் அறுவடை செய்யும்.

சென்னை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 சட்டசபை தொகுதிகளில் திமுக 15 இடங்களில் போட்டியிடுகிறது. அதில், மயிலாப்பூர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தியாகராய நகர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் துளுவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கொளத்தூர் தொகுதியில், இசை வேளாளர் சமூகத்தைச் சார்ந்த முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

துறைமுகம் தொகுதியிலும், வில்லிவாக்கம் தொகுதியிலும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த பி.கே.சேகர்பாபு, கார்த்திக் மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பெரம்பூர் தொகுதியில் முதலியார் சமூகத்தைச் சார்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வன்னியர் சமூகத்தவரான ஜே.ஜே.எபினேசர், சைதாப்பேட்டை தொகுதியில் பருவத ராஜகுலத்தைச் சேர்ந்த மா.சுப்பிரமணியன் ஆகியோர் திமுக சார்பில் வேட்பாளர்களாக உள்ளனர். ராயபுரம் தொகுதியில் இஸ்லாமியரான சுபேர்கான் நிறுத்தப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள 2 தனித் தொகுதிகளிலும் பறையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிற்கின்றனர்.

சென்னை மாவட்டம் - வேட்பாளர்கள் - சமூகம்

மயிலாப்பூர் - த.வேலு (நாடார்)

தியாகராய நகர் - ராஜா அன்பழகன் (துளுவ வேளாளர்)

சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன் (பருவத ராஜகுலம்)

விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா (நாடார்)

அண்ணா நகர் - நே.சிற்றரசு (துளுவ வேளாளர்)

ஆயிரம் விளக்கு - டாக்டர் எழிலன் நாகநாதன் (துளுவ வேளாளர்)

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின் (இசை வேளாளர்)

துறைமுகம் - பி.கே.சேகர்பாபு (நாயுடு)

ராயபுரம் - சுபேர்கான் (இஸ்லாமியர்)

எழும்பூர் (தனி) - தமிழன் பிரசன்னா (பறையர்)

திரு.வி.க.நகர் (தனி) - கே.எஸ்.ரவிச்சந்திரன் (பறையர்)

வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன் (நாயுடு)

பெரம்பூர் - ஆர்.டி.சேகர் (முதலியார்)

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஜே.ஜே.எபினேசர் (வன்னியர்)

கொளத்தூர் - மு.க ஸ்டாலின் (இசை வேளாளர்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+