கே சி வீரமணி வீட்டுக்கு விரைந்து வந்த பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம்.. சரமாரி கேள்வி
சென்னை: முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது சட்ட திட்டங்களுக்கு புறம்பாக இருப்பதாகவும், இந்த குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வேலூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை , திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக திருப்பத்தூரில் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் மட்டும் சுமார் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ், ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ், 3) ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் அமைந்துள்ள கேசி வீரமணி வீடு, பழைய ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள வீரமணியின் மற்றொரு வீடு ஆகியவற்றில் சோதனை நடக்கிறது.

யார் யார் வளையத்தில்
இதேபோல் கேசி வீரமணியின் தம்பி காமராஜ் வீடு, கேசி வீரமணியின் அண்ணன் அழகிரி வீடு, வீரமணியின் குடும்பத்தைச் சார்ந்த பிடி மண்டி என்பவரது வீடு, தமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் வீடு, திருப்பத்தூரில் அமைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் வீடு, ஏலகிரி கிராமத்தில் அமைந்துள்ள அதிமுக மகளிர் அணி தலைவியான சாந்தி வீடு, ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம், நாட்றம்பள்ளி மல்லகுண்ட பகுதியை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ராஜா என்பவரது வீடு. நாட்றம்பள்ளி பகுதியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் சாமராஜ் என்பவரது வீடு, நாட்றம்பள்ளி கத்தாரி பகுதியை சேர்ந்த குட்லக் ரமேஷ் என்பவரது வீடு , ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் வீட்டில் என சுமார் 14 வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பார் கவுன்சில் செல்வம்
சென்னை சாந்தோமில் உள்ள முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திவரும் சோதனையை நேரில் சென்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம், பார்வையிட்டார். கேசி வீரமணியின் மனைவி, குழந்தைகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்க வந்ததாகவும் சொன்ன பிறகும் அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

முதல் தகவல் அறிக்கை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருப்பதாகவும், அதற்கான முறையான சான்றுகளை அளிக்க கே சி வீரமணியின் குடும்பத்தினர் தயாராக இருந்தும், இதுபோன்ற சோதனை நடவடிக்கை எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அராஜக போக்கு
மேலும் சோதனை நடைபெறும் வீடு அமைந்திருக்கும் சாலை முழுவதும் காவல்துறை தடுப்பு வேலிகள் அமைத்து இருப்பதாகவும், யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்காதது காவல்துறையின் அராஜக போக்கை காட்டுவதாகவும் செல்வம் கூறினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications