சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் பரிசு மட்டுமா.. இதையும் நோட் பண்ணுங்க! தமிழ்நாடு அரசின் ஸ்பெஷல் அறிவிப்பு.. குஷி செய்தி

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பரிசு பொருட்களை எப்படி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஒரு பக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க.. இன்னொரு பக்கம் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளுக்கு இன்னொரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்றில் இருந்து பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. கடந்த வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் இந்த வருடம் வழங்கப்பட உள்ளது.

அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட உள்ளது. கரும்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரும்பு விநியோகம் செய்யப்படவில்லை என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக அரசியலாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 இரு 500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும்.. பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முக்கிய அறிவுரைகள்! இரு 500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும்.. பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முக்கிய அறிவுரைகள்!

எதிர்ப்பு

எதிர்ப்பு

முக்கியமாக அதிமுக சார்பாக இதற்கு எதிராக போராட்டமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டு கரும்புகளை கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுப்போம் என்று அறிவித்தது. கரும்புடன் சேர்த்து 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா இல்லை, பெரிதாக பேரிடர் இல்லை என்ற போதிலும் 1000 ரூபாய் வழங்கப்படுவது கவனம் பெற்றுள்ளது. பொங்கல் பரிசு பொருட்களை எப்படி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஒரு பக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கரும்பு

கரும்பு

இதையடுத்து சற்று நேரத்திற்கு முன் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தீவுத்திடல் அன்னை சத்யா ரேசன் கடையில் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மஞ்சள் பையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு இடையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளுக்கு இன்னொரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ரேஷன் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு தரமான கரும்புகளை வாங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள்தான் இதற்கு பொறுப்பு. தரமான கரும்புகளை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும்.

தோகையுடன்

தோகையுடன்

6 அடி உயரம் உள்ள செங்கரும்பு தோகையுடன் எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த கரும்பை ஈர சாக்கு போட்டு போற்றி வைக்க வேண்டும். கரும்பை காய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கரும்பின் உயரம் ஆறு அடிக்கு குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆறு அடிக்கு குறைவாக கரும்புகளை கொள்முதல் செய்ய கூடாது. சொத்தை கரும்புகளை கொள்முதல் செய்ய கூடாது. கரும்பின் உயரத்தில் தொகையை கணக்கிட கூடாது என்று தமிழ்நாடு அரசு கரும்பு தொடர்பாக கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. கரும்பு மட்டுமே விநியோகம் செய்யப்படும் பொருட்களில் கெட்டு போக வாய்ப்பு உள்ள பொருட்கள் ஆகும்.

தடுக்க முடிவு

தடுக்க முடிவு

அப்படி கரும்பு கெட்டு போக கூடாது என்பதால் தமிழ்நாடு அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது. இன்னொரு பக்கம் ஜன.12 ஆம் தேதிக்குள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இரண்டு 500 ரூபாய் தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும். ரூ 1000த்தை சில்லறை மாற்றி வழங்கக் கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

English summary
Tamil Nadu Pongal Gift + 1000 rs: CM Stalin major order on the quality of the sugar cane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X