உங்கள் வீட்டில் மின் கட்டணம், தவெக ஆட்சியில் கூடியுள்ளதா? கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே
சென்னை: "3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
"சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு அதிகரித்துவிட்டது என்று சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், மின் கட்டணம் அதிகரித்துவிட்டது என்ற குற்றச்சாட்டும் கூடவே உலா வருகிறது. இவ்வாறு குற்றம்சாட்டுவோர் தவெக மீதான பொறாமையில் பொங்குகிறார்கள் என்பது ஆளும் கட்சியினர் வாதமாக உள்ளது. சரி, நிஜத்தை தெரிந்து கொள்வோம். நீங்களே சொல்லுங்கள் வாசகர்களே.. மின் கட்டணமும், மின் வெட்டும் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்துள்ளதா, அல்லது, வெறும் அரசியல் குற்றச்சாட்டுதானா? உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்சில் பதிவு செய்யுங்கள், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.


Click it and Unblock the Notifications
