2018இல் கடைசி இடம்; 2021 முதல் இடம்! வெல்டன் தமிழ்நாடு! அடிதூள்
சென்னை: ஸ்டார்ட்அப் இந்தியா 2022 ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலம் என்ற பட்டியலில் முதல் இடத்தை எட்டிப் பிடித்துள்ளது.
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் புத்தொழில் நிறுவனங்கள் தொடர்பான தரவரிசை பட்டியலை மாநிலம்வாரியாக வெளியிட்டு வருகிறது. அந்தப் பட்டியல் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

இந்தியா : ஸ்டார்ட்அப் இந்தியா தரவரிசை பட்டியல் என்பது பெஸ்ட் பர்ஃபாமர், டாப் பர்ஃபார்மர், லீடர்ஸ், ஆஸ்பிரிங் லீடர்ஸ், எமர்ஜிங் ஸ்டேஸ் என ஐந்து நிலைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அதில் மிகச் சிறப்பாகச் செயலாற்றிய 2021ஆம் ஆண்டிற்கான மாநிலப் பட்டியலில், முதல் இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது குஜராத். அதைப் போலவே கர்நாடகாவும் மேகாலயாவும் இதே தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இடத்திலிருந்த குஜராத் 2019 ஆம் ஆண்டு அந்த இடத்தை தக்கவைத்தது. கூடவே இதே ஆண்டில் அந்தமான் நிக்கோபார் இடம்பிடித்திருந்தது. ஆனால் இந்த 2021 ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலில் அந்தமான் நிக்கோபார் அந்த இடத்தை இழந்துள்ளது. எப்படிப் பார்த்தாலும் கடந்த 3 ஆண்டுகளாகக் குஜராத் இந்த முதல் இடத்தை விடாமல் தக்கவைத்து வருகிறது.
அடுத்ததாக டாப் பர்ஃபாமர் பட்டியலில் இந்த 2021 ஆம் ஆண்டுக்கான மாநிலங்களாகக் கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஒடிசா, ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் கர்நாடகா இந்தத் தரவரிசையில்தான் இடம்பிடித்திருந்தது. இந்த 2021 ஆண்டு அம்மாநிலம் முன்னேறி பெஸ்ட் பர்ஃபாமர் இடத்தை நோக்கி முன்னேறி இருக்கிறது.

இதனை அடுத்து மூன்றாவது தரவரிசை பட்டியல்தான் 'லீடர்ஸ்' என்பது. அதாவது சிறந்து செயல்பட்டு முன்னேறி வரும் மாநிலம் என்று இதனைச் சொல்லலாம். 2021 ஆம் ஆண்டு இந்தத் தரவரிசை பட்டியலில்தான் தமிழ்நாடு முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. நமது மாநிலத்துடன் அசாம், பஞ்சாப், உத்தரப் பிரதேஷ், உத்தரக்காண்ட், அருணாச்சல பிரதேசம், கோவா, அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.
இதில் வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால், பெஸ்ட் பர்ஃபாமர் என்ற தரவரிசைப் பட்டியலில் 2019 ஆம் ஆண்டு இடம்பிடித்திருந்த அந்தமான் நிக்கோபார், இந்த 2021 இல் அந்த இடத்தைவிட்டு கீழே இறங்கியுள்ளது.
அதில் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால் 2018-இல் கடைசித் தரநிலையிலிருந்த தமிழ்நாடு, இப்போது முன்னேறி, 'லீடர்ஸ்' வரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாடு இந்தளவுக்கு முன்னேறியதற்குச் சரியான சூழலை மாநில அரசு உருவாக்கிக் கொடுத்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தரவரிசையிலிருந்த தமிழ்நாட்டை இந்த 2 ஆண்டுகளில் முதல் இடத்தை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னேற்றி உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு தனது நோடல் ஸ்டார்ட்அப் ஏஜென்சியான StartupTN ஐ 2021 இல் புதுப்பித்தது, மேலும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிதியை மிகச் சரியாகப் பயன்படுத்தியது, அத்துடன் பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் புத்தொழில் தொடங்குவதற்கான நிதியை பட்ஜெட்டில் உயர்த்தியது, முறையான மானியங் கள் கிடைக்கத் தடையாக இருந்த சரளங்களைத் திறந்துவிட்டது எனப் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டதன் அடையாளமாகவே இந்தத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தை எட்டிப்பிடிக்க வைத்துள்ளது என்கிறார்கள் தொழில்முனைவோர் பலர்.
இது குறித்து ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சி.இ.ஒ சிவராஜா, " புதிய நிதிகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோரை முதலீட்டாளர்களுடன் இணைக்கும் நெட்வொர்க்குகளை உருவாக்குதல், உலகளாவிய அளவில் தொடர்பு ஏற்படுத்தித் தருதல் ஆகிய நடவடிக்கைகள்தான் தரவரிசையில் இந்தளவுக்கு நம் மாநிலம் உயர உதவியுள்ளது" என்கிறார்.
தமிழ்நாடு முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "#StartUp தரவரிசைப் பட்டியலில்,
கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையிலிருந்த தமிழ்நாடு,
நமது #DravidianModel ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!

TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று.
இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த மாண்புமிகு அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!
இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்!
2018 இல் தொடங்கப்பட்ட, மாநிலங்களின் தொடக்கத் தரவரிசையைத் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) வெளியிட்டது. 2022 தரவரிசைக்கான மதிப்பீட்டுக் காலம் ஆகஸ்ட் 2021 முதல் டிசம்பர் 2022 வரை" என்று ஒரு பதிவில் கூறியுள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவரிசையின்படி மொத்தம் 15 கோடிக்கும் அதிக மான மதிப்புள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 60க்கும் மேற்பட்ட பணி ஆணை களை தமிழ்நாடு வழங்கியுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே தரவரிசையில் இந்திய அளவில் பெண்களின் தலைமையில் இயங்கிவரும் புத்தொழில் நிறுவனங்கள் மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 356 மாவட்டங்களில் 9000க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் ஊக்குவிப்பைப் பெற்றுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications