அடிதூள் ‘நம்பர் 2 தமிழ்நாடு’.. கோட்டை விட்ட குஜராத்.. மகாராஷ்டிரா மாயாஜாலம்..புட்டுவைத்த ஜெயரஞ்சன்
சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2வது இடத்தை எட்டிப்பிடித்திருக்கிறது என்பதுதான் இந்த வார ஹைலைட் நியூஸ்.
ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்க அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் உற்பத்தி மதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. அதை அளவுகோலாகக் கொண்டு தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (Gross state domestic product of tamil nadu) பற்றிய கணிப்பினை தமிழ்நாடு அரசின் புள்ளியியல் மற்றும் பொருளியல் துறை அறிக்கையாகத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

அதாவது கடந்த 2 ஆண்டுகால 'திராவிட மாடல்' ஆட்சியில் மாநிலத்தின் உற்பத்தி மதிப்பின் மூலம் பொருளாதார வளர்ச்சி எந்தளவுக்கு உள்ளது என்பதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.
அந்த அறிக்கையின் படி தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சியானது, அதாவது ஜிஎஸ்டிபி நிலையான விலையில் ₹14,53,321 கோடியாகவும், 2022-23 நிதியாண்டின்படி தற்போதைய விலையில் ₹23,64,514 கோடியாகவும் உயர்ந்து இருக்கிறது.

நிலையான விலையில் (constant prices) 8.19% ஆகவும், தற்போதைய விலையில் (current prices) 14.16% வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த வளர்ச்சி எப்படி சாத்தியம்? குஜராத்தை 3வது இடத்திற்குத் தள்ளி தமிழ்நாடு 2வது இடத்திற்கு முன்னேறியது எப்படி? முதல் இடத்தில் மகாராஷ்டிரா இருப்பதற்கான காரணம் என்ன?

பல கேள்விகளுடன் தமிழ்நாடு வளர்ச்சிக் குழுவின் துணைத்தலைவர் பொருளாதார அறிஞர் பேராசிரியர் ஜெயரஞ்சனைச் சந்தித்தோம். அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சியானது எப்படி சம அளவில் உள்ளது? வேறு மாநிலங்கள் கோட்டைவிட்ட இடத்தில் தமிழ்நாடு சாதித்தது எப்படி என்பதை எல்லாம் மிகத் தெளிவாகப் புரியவைத்தார்.
"கடந்த 1980 ஆம் ஆண்டு காலகட்ட புள்ளிவிவரங்களை இன்றைக்கு எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், வடமாநிலங்கள் எப்படி இருந்ததோ அதே அளவுக்கான வளர்ச்சியில்தான் தமிழ்நாடும் இருந்தது.

தனிநபர் வருமானமாகட்டும், வறுமையின் அளவீடாகட்டும் இப்படி அனைத்துமே வடமாநிலத்தில் நிலவரம் என்னவோ அதே நிலையில்தான் தமிழ்நாடு இருந்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
அப்படியே கடந்து 1990களுக்கு வந்தால், நம்மைவிட வளர்ச்சியில் முன்னேறிய நிலையில் பஞ்சாப் இருந்தது. அதைப் போன்று மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களும் நம்மைவிட முன்னேறி இருந்தன.

இதற்குப் பின்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சி மெல்ல வேகம் பிடித்து, இன்றைக்குப் பொருளாதார வளர்ச்சியில் 2வது மாநிலமாக வளர்ந்து நிற்கிறோம்.
இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்னவென்றால், ஏதோ சில பணக்காரர்களைப் பிடித்து அவர்களுக்கு சில உதவிகளைச் செய்து, அதன் மூலம் அவர்கள் தொழில் தொடங்கி பணக்காரர்களாக மாறி, அதை வைத்து மாநிலமே பெரிய செல்வம் மிக்க மாநிலமாகத் தோற்றத்தை உருவாக்கிக் காட்டாமல், தமிழ்நாட்டில் வேறு மாதிரியாக நாம் வேலை செய்திருக்கிறோம்.

முதலில் கடந்த 100 ஆண்டுகளில் கல்வியை நாம் அனைவருக்குமானதாக மாற்றி இருக்கிறோம். இன்றைக்குத் தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதம். இந்தியாவிலேயே நாம்தான் அதிகம். இந்திய அளவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 26% ஆக இருக்கின்றபோது நாம் 52% இருக்கிறோம்.
கல்வியைப் பரவலாக்கியதன் மூலம் புதிய வாய்ப்புகள் வரும்போது அந்தப் படித்த பிரிவினர் அதில் பங்குபெற்றனர். அதன் வழியாக மாநிலத்தின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் சமூக மாற்றத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி என்பதுதான் திராவிட இயக்கத்தின் தாரக மந்திரமாக அந்தக் காலத்திலிருந்து வருகிறது.

நம்மைவிட முதல் இடத்தில் மகாராஷ்டிரா இருக்கிறது. நமக்குக் கீழ் குஜராத் இருக்கிறது. அங்குப் பொருளாதார வளர்ச்சி என்பதை முன்னேறி இருப்பதாகச் சொன்னாலும், நம் மாநிலத்தைப் போன்று அங்குப் பொருளாதார வளர்ச்சி என்பது சமூகநீதி அடிப்படையில் இல்லை. அந்த மாநிலங்களில் மனிதவள குறியீட்டு அளவை எடுத்து தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் அவர்கள் அதலபாதாளத்தில் இருக்கிறார்கள்.
உதாரணத்திற்குச் சொன்னால், குஜராத்தில் எத்தனை பெண் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்று நம்முடன் ஒப்பிட்டால் அம்மாநிலம் பின்தங்கி இருக்கும்.

இப்போது வெளியாகி இருக்கின்ற பன்முக வறுமை குறியீட்டின் கணக்கின்படி நம் மாநிலத்தில் 2 விழுக்காட்டு மக்கள்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள். அதே குஜராத்தில் 28 விழுக்காடு. மகாராஷ்டிரா 26 விழுக்காடு.
அதே கேரளாவில் எடுத்தால் நம்மைவிடக் குறைவாக இருக்கிறார்கள். ஆனால், பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் நம்மைவிடப் பின்தங்கி இருக்கிறார்கள். இதில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நாம் ஒரு சமமான வளர்ச்சியை அடைந்துள்ளோம். மற்ற மாநிலங்களில் அந்த சம வளர்ச்சி என்பது இல்லை.
நம்மைவிட மகாராஷ்டிரா பொருளாதார வளர்ச்சியில் முன்னதாக இருப்பதற்குக் காரணம் மும்பை. அதுதான் நிதியின் தலைநகரம். ஆகவே அனைத்து பெருநிறுவனங்களின் தலைமை அலுவலகமும் அங்குதான் உள்ளது.
இந்தப் பெருநிறுவனங்களின் அலுவலகம் எல்லாம் பல மாநிலங்களில் செயல்படும். ஆனால், கணக்கு வழக்குகள் அனைத்து அம்மாநிலத் தலைமை அலுவலகம் மூலம் தாக்கல் செய்யப்படும். ஆகவே மகாராஷ்டிரா முதலாதலாவதாக இருக்கிறது" என்றார்
அவரிடம் தமிழ்நாட்டில் தேசிய அளவைவிட விலைவாசி கட்டுப்பாட்டில் இருப்பதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியை முன்வைத்தோம்.
அதற்கு அவர், "விலைவாசியைப் பற்றிக் கணக்கிடும்போது எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றால் மக்களின் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்கள்தான் தருகிறார்கள். ஒருவரின் அன்றாட சாப்பாட்டுத் தேவைக்கு என்ன வேண்டும் என்பதை அளவில் எடுத்துக் கொள்வார்கள்.
அந்த அளவீட்டின்படி பணத்தை நாம் அன்றாட உணவுத் தேவைக்குத்தான் 65% பயன்படுத்துகிறோம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்து வைத்துள்ளனர். அதற்கு Basket of goods என்று சொல்வார்கள். அந்தப் பையில் அரிசிக்கு என்ன செலவு? பருப்புக்கு என்ன செலவு? எண்ணெய்க்கு என்ன செலவு என்று தோராயமாக விலை நிர்ணயிக்கப்பட்டுக் கணக்கிடப்படுகிறது.
இதிலும் கடையில் வாங்கும் பொருட்களின் அளவு என்ன? பொதுவிநியோக முறை மூலம் வாங்கும் பொருட்களின் அளவு என்ன? என்று கணக்கிடுவார்கள். அதன்படி நம் மாநிலத்தில் பொதுவிநியோக திட்டம் மூலம் 20 கிலோ அரிசி தருகிறோம். சர்க்கரை தருகிறோம். பருப்பு தருகிறோம். ஆக, பலரது தேவையைப் பொதுவிநியோக திட்டம் பூர்த்தி செய்துவிடுகிறது.
ஆனால், மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. ஆகவே வேறு மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில் விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுதான் முக்கிய காரணம்" என்கிறார்.
நிதியில் மட்டும் இல்லை சமூக நீதியிலும் சாதித்துள்ளது தமிழ்நாடு!
-
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications