'இந்தியாவில் ஊராட்சிகளில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்'.. மத்திய அரசு தகவல்
சென்னை: இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறித்து இந்திய பொது நிர்வாக நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கையை மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் டெல்லியில் வெளியிட்டார். அதன்படி, ஊராட்சிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை செயல்படுத்தும் விதத்திலும் அதிகாரப் பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த குறியீட்டின்படி தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறித்து இந்திய பொது நிர்வாக நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கையை மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் டெல்லியில் வெளியிட்டார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியலமைப்பு அதிகாரங்களை நிறைவேற்றுவதற்கு ஊராட்சி அமைப்புகள் எந்தளவு பங்காற்றி உள்ளன என, மாநில அரசு தமது கட்டுப்பாட்டில் உள்ள வளங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு சரியாக பகிர்ந்தளிப்பதில் எவ்வளவு செயல்திறனை உடையதாக உள்ளது என இந்நிறுவனம் மதிப்பீடு செய்தது. கட்டமைப்பு, செயல்பாடுகள், நிதி, பிரதிநிதிகள், திறன் மேம்பாடு, பொறுப்புடைமை ஆகிய குறியீட்டை அடிப்படையாக கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதன்படி, ஊராட்சிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை செயல்படுத்தும் விதத்திலும் அதிகாரப் பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த குறியீட்டின்படி தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. திறன் மேம்பாடு, செயல்பாடுகள் ஆகியவற்றில் 2-வது இடத்தையும், நிதி பரிவர்த்தனையில் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், ஊரக திட்டங்களில் தமிழக ஊராட்சிகளின் ஈடுபாடு மிக உயர்ந்த தரத்தில் உள்ளது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ஊரக உள்ளாட்சியில் பொறுப்பு வகிக்கும் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சியை நடத்துவதிலும் மாநிலம் சிறந்து விளங்குகிறது என்றும் 'பயிற்சி நிறுவனங்களின்' குறியீட்டில் மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது" இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications