e-KYC: கைவிரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன்கார்டுதாரர்களுக்கு இன்று முதல் தடை! தமிழக அரசின் குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 6 மாதங்களாக பொருட்கள் வாங்காத, கைரேகை பதிவு செய்யாத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக தடை செய்யப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் உதவி ஆணையர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

tamil nadu ration card

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, 6 மாதங்களுக்கு மேல் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்காத முன்னுரிமை (PHH) குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை அக்டோபர் 1 2026 முதல் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை சதவீதம் 96.6996 ஆகும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் 10.05.2026 45 02.08.2026, 08.08.2026, 09.08.2026, 29.08.2026, 19.09.2026 மற்றும் 26.09.2026 ஆகிய தேதிகளில் கைவிரல் ரேகை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம்கள் மூலமாக ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த கைவிரல் ரேகை சரிபார்ப்பு, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அன்று 96.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த சிறப்பு முகாம்களின் மூலமாக 4,49,663 முன்னுரிமை (PHH) மற்றும் AAY திட்டப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

எனினும் கைவிரல் ரேகை பணியினை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள். நியாய விலைக்கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது, கைவிரல் கை,கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் தங்களது கைவிரல் ரேகை தகவல்களை விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்ததன் பேரில் நாடு முழுவதும் 1.58 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. தமிழகம் மட்டும் அல்லாத இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் உணவு தானியங்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற உதவிகள் கிடைக்கும். அந்த வகையில் தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் நியாயவிலைக் கடைகள் வாயிலாக இலவசமாகவும் மானிய விலையிலும் உணவுப் பொருட்கள் மாதந்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டுகள் உணவு பொருட்களை வாங்குவதற்கான ஆவணங்களாக மட்டுமில்லாமல் அரசின் உதவிகளை பெற அடையாள அட்டையாக உள்ளது. அந்த வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, குறைந்த விலையில் பாமாயில், பருப்பு வகைகள் மட்டுமில்லாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பு, பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்டவையும் பெற ரேஷன் கார்டு அவசியம்.

எல்லாவற்றுக்கும் மேல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற ஸ்மார்ட் ரேஷன் கார்டு அவசியமாகிறது. ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருக்கிற குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகைகளையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டுமென கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளில் பொருட்களை வாங்குவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 2,28,12,942 ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். நாடு முழுவதும் 20 கோடி பேர் ரேஷன் கார்டு மூலம் பொருட்களை வாங்க தகுதியானவர்கள்.

நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் இன்று முதல் தற்காலிகமாக முடக்கப்படும் என அறிவித்துள்ளது. அந்த பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக முடக்கப்பட்டாலும் அவர்களின் பெயர்கள் உடனடியாக நீக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் தனது தகுதியை உறுதி செய்ய 3 மாத கால அவகாசம் வழங்கப்படும், இந்த காலத்திற்குள் அவர்கள் e-KYC நடைமுறையை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இவ்வாறு இ-கேஒய்சி செய்யப்படும் பயனாளிகளின் கார்டுகள் ஆய்வுக்குள்பட்டு தகுதி உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் அவர்களுக்கு தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+