சர்க்கரை அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.. ரேஷன் வாங்கிட்டீங்களா? ரேசன் கடை ஊழியர்கள் சொல்றதை பாருங்க
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர்.. என்ன காரணம்?
ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மற்றும் ஊக்கத்தொகை, சிறப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.. இது தொடர்பான அறிவிப்புகளையும் அவ்வப்போது வெளியிட்டும், நிறைவேற்றியும் வருகிறது. ஆனாலும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன..

பணியாளர்கள்: குறிப்பாக, பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், தரமற்ற பொருட்களுக்காக நியாய விலை கடை பணியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும், சரியான எடையில் தரமான பொருட்கள் பொட்டலங்களாக வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2 வருடத்துக்கும் மேலாகவே, போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதனால், இன்றைய தினம் மறுபடியும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.. இன்று 13ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போகிறார்கள்.
எடை மோசடி: பொது வினியோக திட்டத்தில் மக்களுக்கு பயோமெட்ரிக் பதிவு செய்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 2016ல் விற்பனை முனையங்கள் வழங்கப்பட்டன. அதனை மேம்படுத்தி வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.. எடை மோசடியை தவிர்க்க அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும் என்று கோருகிறார்கள்.
பல மாவட்டங்களில் பொருட்களை ரேஷன் கடைகளில் இறக்க கட்டாய இறக்கு கூலி வசூலிக்கப்படுகிறதாம்.. பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், வேறு மாவட்டங்களுக்கு பணிமாறுதல் கேட்கும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இன்றைய தினம் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த போகிறார்களாம்.
எதிர்பார்ப்பு: ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதால், இவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.
-
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications