நிலம், சொத்து வாங்குவோருக்கு குட்நியூஸ்.. இனி நிலப்பதிவாளர்களுக்கும் ஈஸி.. மாநில அரசின் ஆன்லைன் வசதி
சென்னை: தங்கள் சொத்துகளை வாங்கும், விற்கும் பணியின் பெரும்பாலானவற்றை ஆன்லைனிலேயே முடித்துக்கொள்ளக்கூடிய வசதியை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.. இதனால், டெல்லியிலுள்ள மொத்தம் 22 நிலப்பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்லத்தேவையில்லை.
தமிழகத்தில் சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள் அனைத்துமே, சார் பதிவாளர் அலுவலகம் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. பத்திரப்பதிவு பணிகள் படிப்படியாக ஆன்லைன் முறைக்கும் மாற்றப்பட்டுள்ளன..

அதேபோல, சொத்து, பத்திரங்களை முறைப்படுத்துவதற்காக, பத்திரப்பதிவு பணிகளை கணினிமயமாக்க, "ஸ்டார்" என்ற சாப்ட்வேர் கடந்த 2000ம் வருடம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆன்லைன் முறை: பிறகு 2018-ல் 2ம் கட்டமாக, "ஸ்டார் 2.0" என்ற சாப்ட்வேர் உருவாக்கப்பட்டதையடுத்து, பத்திரப்பதிவில் பெரும்பாலான பணிகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன. , "ஸ்டார் 3.0" என்ற புதிய சாப்ட்வேர் தேவை தயாரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல, அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவில் மனைகளை கிரயம் பெறும்போது, ஒவ்வொருமனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியே மனு பெறும் சூழல் நிலவியதையடுத்து, "தமிழ் நிலம்" என்ற இணையதள வசதியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார்..
புதிய மென்பொருள்: இந்த புதிய மென்பொருள் மூலமாக, மனைப் பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து, அவற்றின் உரிமையாளர் பெயரில் பதிவு செய்யப்படுவதால், பின்னாளில் மனைகளை உட்பிரிவு செய்யக் கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்படும்.
பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், இதுபோல எண்ணற்ற வசதிகளை தமிழக பதிவுத்துறை ஆன்லைனில் கொண்டுவந்து செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
சார் பதிவாளர்: எனினும், பல்வேறு மாநிலங்களில், நிலங்கள் மற்றும் சொத்துகளை வாங்கவும், விற்கவும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல நேரிடும்போது, வரிசைகள் நீண்டு காணப்படுகின்றன.. இதனால் பல மணி நேரம் வீணாவதுடன் அங்குள்ள லஞ்சம் ஊழலையும் தவிர்க்க முடியாததாகி விட்டது. அதனால்தான், இவைகளை தடுக்கும் முயற்சியில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு ஒரு புதிய திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, தம்முடைய சொத்துகளை வாங்கவும், விற்கவும் பொதுமக்கள், டெல்லியில் எந்த நிலப்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவு செய்யலாம் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள்: எனவே, டெல்லியிலுள்ள மொத்தம் 22 நிலப்பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்லத்தேவையில்லை. தங்கள் சொத்துகளை வாங்கும், விற்கும் பணியின் பெரும்பாலானவற்றை ஆன்லைனிலேயே முடித்துக்கொள்ளலாம்.
இதற்கான ஆவணங்களை, பொதுமக்கள் அப்லோடு செய்தால் போதும். இதனை சம்பந்தப்பட்ட பகுதியின் அலுவலகம் சரிபார்த்து அதற்கு அனுமதி அளிக்கும். பிறகு இவற்றுக்கு தங்கள் உகந்த தேதி, நேரம் குறித்தபிறகு எந்த அலுவலகத்திற்கும் நேரில் சென்று மீதம் உள்ள பணியை முடிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது.
மாற்றங்கள்: இந்த புதிய திட்டம் குறித்து டெல்லியின் முதல்வர் அதிஷி சொல்லும்போது, "பல்வேறு தரப்பினரின் புகார்களின் அடிப்படையில் இப்படியொரு மாற்றங்கள் அமலாக உள்ளன. இதன் பலவற்றில் நீண்ட வரிசையும், சிலவற்றில் குறைந்த கூட்டமும் காணப்படுகின்றன. எங்கெல்லாம் அதிக கூட்டம் உள்ளதோ, அந்த அலுவலகங்களில் புரோக்கர்கள் மூலமாக லஞ்சம், ஊழல் அதிகமாகிறது.. இதை தடுக்கவே இந்த புதிய திட்டம் அமலாக உள்ளது" என்றார்.
டெல்லி அரசின் நிதியை பொறுத்தவரை, நிலப்பதிவாளர் அலுவலகங்களின் வருமானமானது, மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. டெல்லி அரசின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, 22 அலுவலகங்களிலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,000 பதிவுகள் செய்யப்படுகின்றன. இவற்றின் பலவற்றில் 200 வரையும், சிலவற்றில் வெறும் 50 சொத்துகளும் பதிவாகின்றன.
மிகுந்த வரவேற்பு: கடந்த 2022ம் ஆண்டில் அனைத்து அலுவலகங்களிலும் சேர்த்து மொத்தம் 1.25 லட்சம் சொத்துகள் பதிவாகியிருந்தன.. இந்நிலையில், தற்போது அமலாகியிருக்கும் புதிய திட்டமானது, டெல்லி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications