பத்திரப் பதிவு ஆன்லைன்ல நடக்குது.. ஆனால், வெப்சைட் தான் வேலை செய்யல! அடிக்கடி தூங்கும் சர்வர்! அவதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்கும் போதும் விற்கும் போதும் பத்திரப் பதிவு என்பது கட்டாய நடைமுறையாக உள்ளது. அதேபோல், திருமணப் பதிவு, வில் பதிவு, கிரயப் பத்திரம், வில்லங்கச் சான்று உள்ளிட்ட பல்வேறு முக்கிய சேவைகளும் பதிவுத்துறையின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய சேவைகள் அனைத்தும் தற்போது பெரும்பாலும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் அடிக்கடி முடங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகமெங்கும் சுமார் 575-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நிலம், வீடு உள்ளிட்ட சொத்து தொடர்பான ஆவணங்கள் மட்டுமல்லாமல், திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களும் பதிவு செய்யப்படுகின்றன.

Tamil Nadu Registration Department Website Down

பத்திரப் பதிவு

முன்பு வரை, ஆவண எழுத்தர்கள் மூலம் பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு, முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்திய பிறகு, சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யப்படும் நடைமுறை இருந்து வந்தது. இந்த முறையில் ஆவணங்களை சரிபார்த்து பதிவு செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் பல மணி நேரம் அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

சார்பதிவாளர் அலுவலகம்

இந்த காலதாமதத்தை குறைக்கும் நோக்கில், பதிவுத்துறை படிப்படியாக ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் 'ஸ்டார் 1.0' என்ற முறையில் எழுத்துப்பூர்வமாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 'ஸ்டார் 2.0' என்ற இணைய அடிப்படையிலான மென்பொருள் கொண்டு வரப்பட்டது. தற்போது, அதனை மேலும் மேம்படுத்தி 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருள் நடைமுறையில் உள்ளது.

பதிவுத்துறை இணையதளம்

இதன் மூலம் பத்திரப் பதிவு, வில்லங்கச் சான்று பெறுதல், பிரதி ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வது போன்ற பல சேவைகள் ஆன்லைன் வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த இணையதளத்தை முழுமையாக நம்பி பொதுமக்களும் ஆவண எழுத்தர்களும் செயல்பட்டு வரும் நிலையில், இணையதளம் அடிக்கடி செயலிழப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

பதிவுத்துறை இணையம் கோளாறு

குறிப்பாக, சில நாட்களில் பத்திரப் பதிவுகள் அதிகமாகும் போது, தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு இணையதளம் திடீரென முடங்கிவிடுகிறது என கூறப்படுகிறது. சமீப காலமாக இந்த பிரச்சனை அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. பத்திரப் பதிவு, வில்லங்கச் சான்று, பிரதி ஆவணங்கள் பெறுவதற்கான தகவல்களை இணையதளத்தில் உள்ளிடும் நேரத்தில் இந்த பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டு வந்தது.

மக்கள் அவதி

ஆனால் தற்போது, இணையதளத்தின் முகப்பு பக்கம் மட்டுமே திறக்கிறது என்றும், அதன் உள்ளே உள்ள எந்த பகுதியையும் அணுக முடியாத நிலை உருவாகி இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கட்டணம் செலுத்துதல், அலுவலக முகவரி அறிதல் போன்ற அடிப்படை தகவல்களை கூட பார்க்க முடியாத நிலை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், "சிறிது நேரத்தில் சரியாகிவிடும்" என்ற பதில் மட்டுமே கிடைப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஸ்டார் 3.0

இந்த விவகாரம் தொடர்பாக பதிவுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், பதிவுத்துறை இணையதளத்தில் 'ஸ்டார் 3.0' மென்பொருளை முழுமையாக இணைக்கும் பணிகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், தற்காலிக தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கோளாறுகள் விரைவில் சரி செய்யப்பட்டு, இணையதளம் சீராக இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+