'மதயானை..' புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்! - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
சென்னை: புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து சண்டை செய்து வருகிறது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் உறுதியாக கூறியிருக்கிறார்.
"9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

அவர் கொடுத்த "மதயானை" எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!" என்று தனது x தளத்தில் பதிவிட்டிருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஷேர் செய்திருக்கிறார்.
9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 23, 2025
அவர் கொடுத்த “மதயானை” எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர்-மாண்புமிகு… pic.twitter.com/i4hocDR1er
பின்னணி என்ன?
தேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக மும்மொழிக் கொள்கையை இது வலியுறுத்துகிறது. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. ஆனால், அங்கு மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்பட தொடங்கியவுடன் எதிர்ப்புகள் கடுமையாக எழுந்தன. இத்தனைக்கும் அம்மாநிலத்தில் பாஜகதான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. ஆனாலும் கடுமையான போராட்டங்கள் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து எழுந்தன.
பாஜக ஆளும் மாநிலத்திலேயே இப்படி எனில், தமிழ்நாட்டில் சொல்லவா வேண்டும்? கல்வி விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு நியாயமானதாக இல்லை என்று தமிழ்நாடு தொடர்ந்து சண்டை செய்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் மும்மொழிக்கொள்கை, 3,5ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் சாமானிய குடும்ப பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை கல்வியிலிருந்து தூர விரட்ட செய்யும் என்று கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் நமக்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. அதாவது 6-14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடம் வறுமை பின்னணி கொண்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
உதாரணத்திற்கு ஒரு பள்ளியில் 6-14 வயது உடைய மாணவர்கள் 100 பேர் பயில்கிறார்கள் எனில் அதில் 25 பேர் ஏழை குழந்தைகளாக இருக்க வேண்டும். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிக்கு, முதலில் மாநில அரசு செலுத்தும். பின்னர் மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியை விடுவிக்கும். இப்போது புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால், தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய ரூ.2,500 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை.
புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் விடுவிப்போம் என்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பிடிவாதம் பிடிக்கிறார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நிலுவை தொகையை விடுவிக்க நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு தற்போது வரை அசைந்து கொடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பின்பற்றபடுமா? என்பது கேள்வியாக மாறியிருக்கிறது.
இதனால் சாமானிய குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது என்பது, நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடும் செயல். மத்திய அரசு இந்த விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த பின்னணியில்தான், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட்டை அமைச்சர் அன்பில் மகேஷ் ஷேர் செய்திருக்கிறார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications