தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி.. கோவை, பொள்ளாச்சியில் தடை.. ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
அதே சமயம் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாகர்கோவிலில் நாங்குநேரி ஆகியவற்றை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆர்எஸ்எஸ்
இதற்கு அனுமதி வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் போலீசார் இந்த பேரணிக்கு தடை விதிப்பதாக அறிவித்தனர். இங்கே ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கோர்ட் அனுமதி கொடுக்கும்படி உத்தரவிட்டதும் இன்னொரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எம்பி திருமாவளவன் மத நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவதாக திருமா அறிவித்தார். அதே காந்தி ஜெயந்தி தினத்தில் பேரணி நடத்துவோம் என்று மத நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் குறித்த அறிவிப்பை திருமாவளவன் வெளியிட்டார்.

பிஎப்ஐ தடை
இதையடுத்து பிஎப்ஐ தடை காரணமாக ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அனைத்து ஊர்வலத்திற்கும் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் பேரணி செய்தால்.. நாங்களும் பேரணி செல்வோம் என்று திருமா உறுதியாக இருந்த நிலையில்தான்.. ஆளும் தரப்பு மொத்தமாக அனைத்து பேரணிகளுக்கும் தடை விதித்தது. இந்த நிலையில்தான் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மேல்முறையீடு செய்தனர்.

சட்ட ஒழுங்கு
அவர்கள் தொடர்ந்த் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த அனுமதி அளித்ததுடன், அதற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் போலீசார் வெறும் 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கி 47 இடங்களில் சட்ட ஒழுங்கு காரணமாக பேரணி நடத்த அனுமதி மறுத்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று முதல்நாள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன்.. கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தடை
மற்ற எந்த இடத்திலும் வழங்கவில்லை. இதற்கு அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்ப்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாகவும் வாதிட்டார். அனைத்து தரப்பு மக்களையும் காப்பதுதான் அரசின் கடமை என்றும் வலியுறுத்தினார். அமைதியான ஊர்வலத்தை யாரும் தடுக்க முடியாது என்றும், அது ஜனநாயகம் உரிமை என்றும் உறுதிபட தெரிவித்தார்.

கோரிக்கை என்ன
மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிவிட்டு, பேரணி அனுமதி கேட்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்கிறார்கள் என குற்றம்சாட்டினார். மேலும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, அனுமதி வழங்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு மற்ற இடங்களில் ஏன் வழங்கவில்லை என காவல்துறை தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

உளவுத்துறை ரிப்போர்ட்
காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களில் அனுமதி வேண்டுமென செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.

உத்தரவு என்ன
மேலும், விசிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் பொதுக்கூட்டம், மனித சங்கிலிக்கு அனுமதி கேட்டதாலேயே அனுமதிக்கப்பட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ். கேட்பது பேரணிக்கான அனுமதி என்பதால், வழங்க முடியாது என தெரிவித்தார். உள் அரங்கு கூட்டம் என்றால் அனுமதி வழங்குவதில் பிரச்சனை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ். தரப்பு மாநிலத்தின் பாதுக்காப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் என்.ஆர்.இளங்கோ திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக அரசு எதிர்ப்பு
கோவையை தவிர மற்ற இடங்களில் அனுமதி அளிக்க பரிசீலிக்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தங்களது உயிரை துச்சமென நினைத்தும், நேரத்தையும் தியாகம் செய்தும் தகவல்களை சேகரிக்கும் உளவுத்துறையினர் தரும் தகவல்களை எப்படி யூகம் அல்லது அனுமானம் என சொல்ல முடியும் எனவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பிற்கு அவர் கேள்வி எழுப்பினார். அதன்பின்னர் உளவுத்துறையின் அறிக்கையையும் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்தார்.

அனுமதி
ஆனால் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது எனவும், பேரணிக்குதான் காவல்துறை அனுமதி வழங்க வேண்டுமெனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உளவுத்துறை அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்க வேண்டுமா வேண்டாமா என உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (நவம்பர் 4) தள்ளிவைத்தார்.

ஆர்எஸ்எஸ்
இந்த நிலையில் தற்போது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதில், 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதே சமயம் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரிய்ல் அருமனை, நாகர்கோவிலில் நான்குனேரி ஆகியவற்றை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம். 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும். இந்த 6 இடங்ஜளில் 2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications