RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: தமிழகத்தில் 2026-27 கல்வியாண்டிற்கான RTE (கல்வி உரிமைச் சட்டம்) கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஏழை, எளிய மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்காக, தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 25% இலவச இடங்களில் சேருவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 20, 2026 அன்று தொடங்கி, மே 18, 2026 அன்று நிறைவடைகிறது. விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டதும், மே மாத இறுதியில் வெளிப்படையான குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். ஜூலை 31, 2026 நிலவரப்படி, LKG-க்கு 3 முதல் 4 வயதும், ஒன்றாம் வகுப்புக்கு 5 முதல் 6 வயதும் இருக்க வேண்டும். வசிக்கும் இடத்திலிருந்து 1 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைன் விண்ணப்பத்திற்கு, குழந்தையின் புகைப்படம் (150 px X 175 px), பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate), பெற்றோரின் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை (Ration Card), வருமானச் சான்றிதழ் (Income Certificate - வருவாய் துறையிடம் பெற்றது), சாதிச் சான்றிதழ் (Community Certificate) மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
சிறப்புப் பிரிவினருக்கான (ஆதரவற்றோர், எச்.ஐ.வி பாதிப்பு, மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர் குழந்தைகள்) சான்றிதழும் கட்டாயம். இவைகளை முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும்.
தகுதியுள்ள பெற்றோர்கள் தமிழக அரசின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஒரு குழந்தை அதிகபட்சமாக 5 பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்தால், வெளிப்படையான குலுக்கல் (Lottery) மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அல்லது அரசு உதவி மையத்தை அணுகவும். இந்த திட்டத்தால் 2013 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு கல்வியாண்டு வரை ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications