"ப்ரீ-ஹேண்ட்".. பொறுத்தது போதும்.. ஆர்.என் ரவிக்கு எதிராக புது "ரூட்" எடுத்த திமுக.. திமிறிய டெல்லி
சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - திமுக அரசுக்கு இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
பல மாநிலங்களில் ஆளுநர் - முதல்வர்கள் இடையே மோதல் நிலவி வருகிறது. ஆனால் இதை மாநில முதல்வர்கள் வேறு வேறு விதமாக கையாண்டு வருகிறார்கள்.
உதாரணமாக மேற்கு வங்கத்தில் தற்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆளுநராக இருந்த போது முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்தார்.

மோதல்
இந்த மோதல் அரசியல் நாகரீகம் தாண்டி சென்றது. முக்கியமாக வாட்ஸ் அப்பில் ஆளுநரை மமதா பானர்ஜி பிளாக் செய்யும் அளவிற்கு நிலைமை மோசமானது. அதேபோல்தான் கேரளாவிலும் நிலைமை கைமீறி உள்ளது. கேரளாவில் ஆரிப் கானுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கு மோதல் நிலவி வருகிறது. அங்கு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய சொல்லும் அளவிற்கு ஆளுநர் அத்துமீறி வருகிறார்.

கேரளா
கேரளாவில் ஆளுநர் ஆரிப்பை முதல்வர் பினராயி நேற்று மேடை ஒன்றில் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். நேரடியாக.. உங்கள் பதவிக்கான மரியாதையை காப்பாற்றிக்கொள்ளுங்கள். அத்துமீறாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

தெலுங்கானா
முக்கியமாக அங்கு மேலவைக்கு கவுசிக் ரெட்டி என்ற எம்எல்ஏவை ஆளும் டிஆர்எஸ் கட்சி பரிந்துரை செய்தது. இதை தமிழிசை ஏற்றுக்கொள்ளாததும் இந்த மோதலுக்கு காரணம். ஆளுநராக தமிழிசை இந்த நியமனத்தை நிராகரித்தார். இதன் பின் நடந்த தேநீர் விருந்தை டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். அதோடு ஆளுநர் தமிழிசை எங்காவது சென்றால் அவருக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு கூட கொடுக்காமல், அவரை வரவேற்க கூட செல்லாமல் அவமானம் செய்தனர்.

ஆளுநர் முதல்வர்
தமிழ்நாட்டிலும் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் - திமுகவிற்கு இடையில் மோதல் இருக்கிறது. ஆனால் இதை திமுக வேறு ரூட்டில் கையாண்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் போல அரசியல் ரீதியாக அவமானம் செய்வது, வெளியே மோதிக்கொள்வது என்று இல்லாமல், இந்த விஷயத்தை திமுக நேர்த்தியாக கையாண்டு வருகிறது. உதாரணமாக ஆளுநருக்கும் முதல்வருக்கும் கொள்கை ரீதியாக மோதல் இருந்தாலும், திமுக அரசு நிகழ்வுகளில் ஆளுநரை புறக்கணிப்பது இல்லை.

ஆர். என் ரவி
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கிய நிகழ்வு தொடங்கி, ஆளுநருக்கு உரிய மரியாதையை திமுக எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை. ஆளுநருக்கான மரியாதையை வழங்கியபடியே, ஆளுநரை எதிர்க்கும் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. அதாவது ஆளுநருக்கு எதிராக அரசியல் ரீதியாக மோதாமல், முறைப்படி புகார்களை வைக்கும் முடிவில் திமுக இறங்கி உள்ளது. அரசியல் ரீதியாக கண்டிக்காமல்.. தனது எதிர்ப்பை நேரடியாக ஜனாதிபதியிடம் கொண்டு செல்லும் முடிவில் திமுக இறங்கி உள்ளது.

ஸ்டாலின்
சமீபத்தில் ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொலவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்குக் காரணம், தமிழகத்தில் தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமோ, அல்லது தன்னை நோக்கிய கவனிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்ற தாகமா என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன, என்று அறிக்கையில் கூறின.

அறிக்கை
இந்த அறிக்கையில் திமுக சார்பாக டிஆர் பாலு கையெழுத்து போட்டு இருந்தார். இந்த நிலையில்தான் திமுக இதில் அடுத்தடுத்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து உள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாளைக்குள் கூட்டணி கட்சிகளிடம் கையெழுத்து பெற்று, இந்த வாரமே ஜனாதிபதியிடம் கொடுக்கும் திட்டத்தில் திமுக களமிறங்கி உள்ளது. ஆனால் இதில் டெல்லி தரப்பு பெரிதாக பாசிட்டிவ் முடிவு எதையும் எடுக்காது. திமுக வைக்கும் கோரிக்கையை நிராகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டிஆர் பாலு
மற்ற மாநிலங்கள் போல பொதுவில் அடித்துக்கொள்ளாமல் திமுக இதில் புதிய ரூட்டை எடுத்து உள்ளது. இத்தனை நாட்கள் பொறுத்து இருந்துவிட்டு தற்போது டி ஆர் பாலு மூலம் திமுக இதற்காக காய் நகர்த்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் இதில் நேரடியாக அறிக்கை வெளியிட முடியாது என்பதால், இது தொடர்பாக அறிக்கை வெளியிடுவது, பேட்டி கொடுப்பது என்று டி ஆர் பாலுவிற்கு திமுக ப்ரீ ஹேண்ட் கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக எடுத்திருக்கும் நிலைப்பாட்டை கேரளா, தெலுங்கானா முதல்வர்களும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications