Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்ட விரோதமாக ஏரி மற்றும் குளங்கள் குத்தகை.. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வார்னிங்.. அமுதா IAS அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஊராட்சியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை மீன் குத்தகைக்குத் தன்னிச்சையாக விடுவது சட்ட விரோதமானது எனத் தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் எச்சரித்துள்ளார்,

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக மத்திய அரசின் பணியில் இருந்த அமுதா ஐஏஸ் சமீபத்தில் தான் மீண்டும் மாநில பணிக்குத் திரும்பினார்.

அப்போதே மிக முக்கிய துறைகளில் எதாவது ஒன்றுக்குச் செயலாளராக்க நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக அமுதா நியமிக்கப்பட்டார்.

களத்தில் அமுதா ஐஏஎஸ்

களத்தில் அமுதா ஐஏஎஸ்

சமீபத்தில் பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு மாவட்ட நிவாரண பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு இவரிடம் தான் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக களத்தில் இறங்கிய இவர், சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உத்தரவிட்டார்.

ஆடியோ

ஆடியோ

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமுதா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ஊராட்சியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை மீன் குத்தகைக்குத் தன்னிச்சையாக விடுவது சட்டவிரோதம் என்றும் குறிப்பிட்ட பணத்தை அரசுக்குக் கட்டி விட்டு மீதி பணத்தை முறைகேட்டில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்,

சட்டவிரோத ஏலம்

சட்டவிரோத ஏலம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், "அனைத்து ஊராட்சி செயலர்கள், பொறியாளர்களுக்கு வணக்கம்.. தற்போது பல ஊராட்சிகளில் உள்ள ஏரிகளை மீன் குத்தகைக்கு ஊருக்குள் பேசி ஏலம் விடப்படும் நடைமுறை இருக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம். ஏரி, குளங்களை ஏலம் விட வேண்டும் என்றால் முதலில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதற்குரிய அலுவலர்கள் முன்னிலையில் தான் ஏலம் நடைபெற வேண்டும். அந்த ஏல தொகையும் அரசு அலுவலகத்தில் தான் கட்ட வேண்டும்.

முறைகேடு

முறைகேடு

ஏரியை ஒரு லட்ச ரூபாய்க்கு ஏலம் விடுத்துவிட்டு, அலுவலகத்தில் பெயருக்கு 20 ஆயிரம் மட்டும் செலுத்தும் நடைமுறை இருக்கிறது. இதர தொகையை வேறு செலவுகளாகக் கணக்கு காண்பிப்பது தவறான ஒரு நடைமுறை. இனிமேல் இதுபோன்ற நடைமுறை எதாவது பஞ்சாயத்தில் நடப்பது உறுதியானால், ஏலம் விட்டவர்கள், ஏலம் எடுத்தவர்கள், அதற்குத் துணையாக இருந்தவர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

செல்லாது

செல்லாது

ஏரிகளை ஏலம் விடுவது தொடர்பாக இதுவரை அலுவலகங்களில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.. இதனால் இதற்கு முன் ஏரி எதாவது ஏலம் விடப்பட்டிருந்தால் அது செல்லாது. அப்படி நடந்தால் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது முக்கிய பிரச்சினை. அனைவரும் இதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய ஊராட்சி மன்றம் சார்பில் குளங்களுக்கு வேண்டுமானால் ஏலம் விடலாம். ஆனால், ஏரிக்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாது. யாரும் ஏரியை உரிமை கொண்டாட முடியாது. ஏரியின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசு அலுவலகங்களிடம் தான் உள்ளது.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

மேலும், தண்ணீர் செல்வதாகக் கூறி சில பகுதிகளில் பொதுமக்களே ஏரியை உடைத்துவிடுவதாகவும் புகார்கள் வருகிறது. இதுபோன்ற நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படி யாராவது செய்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் அந்த ஆடியோ பதிவில் எச்சரித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+