Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உளுந்தூர்பேட்டை டூ வேலூரில் விழுந்த ஹேப்பி.. தமிழகத்தில் முதல் முறையாக 100 மின்சார ஆம்னி பஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக தேசிய நெடுஞ்சாலையில், மின்சார பஸ்களுக்கான முதல் சார்ஜிங் மையம், உளுந்துார்பேட்டையில் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளதாம்.. இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக, 100 மின்சார ஆம்னி பஸ்கள் ஒரு மாதத்தில் இயக்கப்பட உள்ளதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது.

உலகம் முழுவதுமே இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.. அந்தவகையில், நம்முடைய நாட்டிலும், மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை பெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு நிறுவனங்கள் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வமும் காட்டி வருகின்றன.

Electric Omni Buses TamilNadu Fuel

இந்நிலையில், தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாட்டில், ஹைவேஸ்களில், இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாயிண்ட் அதாவது வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் வசதியை சுமார் 500 இடங்களில் அமைக்க பசுமை எரிசக்தி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆம்னி பஸ் உரிமையாளர்கள்

அதேபோல தமிழகத்தில், சென்னை - திருச்சி, மதுரை, சேலம், தஞ்சாவூர், பெங்களூரு போன்ற வழித்தடங்களில், 100 சொகுசு மின்சார ஆம்னி பஸ்களை இயக்கும் வகையில், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கடந்த ஜூலையில் ஒப்பந்தம் செய்தது.

மற்றொருபுறம், தமிழகத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், "ஹைஸ்பீடு சார்ஜிங்" மையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் நடந்து வருகின்றன.

இதில் கடந்த ஆகஸ்ட் மாதம், அரசுக்கு முன்பாகவே ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில், 6,000 சதுர அடி இடத்தில், 2.50 கோடி ரூபாயில், மின்சார பஸ்களுக்கான முதல், சார்ஜிங் மையம் அமைக்கப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் பெற்றது.

ஹைஸ்பீடு - சார்ஜிங் மையம்

அப்போது அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 'இன்டர்சிட்டி' ஆம்னி மின்சார சொகுசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பஸ்சுக்கு ஒரு முறை சார்ஜிங் செய்தால், 380 கிமீ தூரம் செல்ல முடியும். முதல் கட்டமாக, 100 மின்சார பஸ்களை இயக்க உள்ளோம்.

நெடுஞ்சாலைகளில் தேர்வு செய்யப்பட்ட, 18 இடங்களில், சார்ஜிங் வசதி ஏற்படுத்த, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மின்சார வாகனங்களின் தேவைக்கு ஏற்ப, சார்ஜிங் மையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்" என்று தெரிவித்திருந்தார்.

சார்ஜிங் மையங்கள்

இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது தமிழகத்தில் முதன்முறையாக, 100 மின்சார ஆம்னி பஸ்கள் ஒரு மாதத்தில் இயக்கப்பட உள்ளதாகவும், கிளாம்பாக்கம் உட்பட மூன்று இடங்களில், 'சார்ஜிங்' மையங்கள் அமைக்க, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாகவும் மகிழ்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது.

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், தஞ்சாவூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இயக்க, 100 மின்சார ஆம்னி பஸ்களை, 178 கோடி ரூபாயில் வாங்க, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், டாடா மோட்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், நேற்றைய தினம் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசினார்.

100 ஆம்னி மின்சார சொகுசு பஸ்கள்

அப்போது அவர் சொல்லும்போது, தமிழகத்தில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், இன்டர்சிட்டி ஆம்னி மின்சார சொகுசு பஸ்களை இயக்க உள்ளோம். ஒரு முறை சார்ஜிங் செய்தால், 380 கிமீ தூரத்துக்கு செல்ல முடியும். முதல்கட்டமாக, 100 பஸ்களை இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்.

மறுகட்டமாக மேலும், 200 மின்சார பஸ்கள் வாங்க திட்டமிட்டுள்ளோம். உளுந்துார்பேட்டையில், சார்ஜிங் மையம் பணிகள் முடிந்து தயாராக இருக்கிறது.. அதுபோலவே, கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம், வேலுார் பஸ் நிலையங்கள் அருகில், சார்ஜிங் மையங்கள் அமைக்க, இடங்களை தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொரு இடத்திலும், தலா 2 கோடி ரூபாய் செலவில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+