பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் வாக்காளர்களின் தீர்ப்பு என்பது பல நேரங்களில் அரசியல் ஜாம்பவான்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதாக இருந்திருக்கிறது. "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பதற்கு உதாரணமாக, செல்வாக்கு மிக்க முதலமைச்சர்களையும், தேசியத் தலைவர்களையும் கூட தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பத் தயங்கியதே இல்லை.
ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி, சுதந்திர இந்தியாவின் முதல் மூன்று பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். 1967 தேர்தலில் அவரை எதிர்த்து தங்கப்பன் என்ற குதிரை வண்டி ஓட்டியை நிறுத்தியது திமுக. ராமநாதபுரம் மன்னரை தோற்கடித்து வெற்றி பெற்றார் குதிரை வண்டி தங்கப்பன்.

விருதுநகரில் சரிந்த பெருந்தலைவர்
தமிழக அரசியலின் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்தவர் காமராஜர். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, 'கிங் மேக்கராக' டெல்லியில் ஆட்சியைத் தீர்மானித்தவர். ஆனால், 1967-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் அவருக்கு ஒரு கசப்பான அனுபவத்தைத் தந்தது. சொந்த ஊரான விருதுநகரில் போட்டியிட்ட காமராஜரை, அப்போது ஒரு மாணவர் தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த பெ. சீனிவாசன் எதிர்கொண்டார்.
நாடே வியந்த அந்தத் தேர்தலில், வெறும் 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் தோல்வியடைந்தார். ஒரு இளம் மாணவரிடம் தேசியத் தலைவர் தோற்ற அந்தத் தருணம், தமிழக அரசியலில் திராவிட இயக்கத்தின் எழுச்சியை உரக்கச் சொன்னது.
1952-லேயே தொடங்கிய வரலாறு
பலம் வாய்ந்த தலைவர்கள் தோற்பது 1967-ல் தொடங்கியது அல்ல. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலேயே (1952) இந்த 'அதிர்ச்சி வைத்தியம்' தொடங்கிவிட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் பி.எஸ். குமாரசுவாமி ராஜா.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், சுயேச்சை வேட்பாளரான டி.கே. ராஜாவிடம் தோல்வியைத் தழுவினார். ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே தோற்கடிக்கப்பட்டது அதுவே முதல் முறை.
பக்தவச்சலம்
1957 சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட பக்தவத்சலம், சுயேச்சை வேட்பாளர் அண்ணாமலையை 4,737 வாக்குகள் வித்தியாசத்திலும், 1962 தேர்தலில் அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலையைவிட 1,237 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும் வெற்றி பெற்றார். ஆனால், 1967 தேர்தலில் அதே தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜரத்தினத்திடம் 8,926 வாக்குகள் வித்தியாசத்தில் பக்தவத்சலம் தோல்வியடைந்தார். பக்தவத்சலத்தின் இந்தத் தோல்வியும் அன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்டது.
அண்ணா
1957 சட்டசபைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனைவிட 11,143 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், 1962 தேர்தலில் அதே தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடேச முதலியாரிடம் 9,190 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணா தோல்வியடைந்தார். பின்னர், அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தென் சென்னை எம்.பி ஆனார்.
1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் அண்ணா எம்.பி யாக இருந்ததால் போட்டியிடவில்லை. சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அண்ணா, 1967-இல் முதல்வராகப் பதவியேற்றார்.
ஜெயலலிதா
ஜெயலலிதா முதல் முறையாக 1989 தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தாயக மறுமலர்ச்சி கழக வேட்பாளர் டி. ராஜேந்தரைக் காட்டிலும் 37,215 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். அதே தேர்தலில் காங்கயம் தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் மன்றாடியாரைவிட 33,291 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
1991 தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துமனோகரனைவிட 28,731 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஜெயலலிதா வென்றார். ஆனால், 1996 தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகவனத்திடம் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா தோல்வியடைந்தார். அவரது இந்தத் தோல்வியும் அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
வாக்காளர்களின் வலிமை
தமிழக அரசியல் என்பது எப்போதும் தனிநபர் வழிபாட்டைச் சுற்றியே இருப்பதாகக் கருதப்பட்டாலும், அந்தப் பிம்பங்கள் மக்கள் நலனைத் தவறவிடும்போது வாக்காளர்கள் சமரசமின்றி செயல்படுகிறார்கள்.
"எந்தவொரு ஆளுமையும் வாக்காளனை விடப் பெரியதல்ல" என்பதை 1952 முதல் சமீபத்திய தேர்தல்கள் வரை தமிழக மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். ஜாம்பவான்களின் கோட்டைகள் தகர்க்கப்படுவதும், புதிய முகங்கள் அங்கீகரிக்கப்படுவதும் இந்த மண்ணின் ஜனநாயக மரபாகிவிட்டது.
-
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications