இது லிஸ்ட்லயே இல்லையே.. ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருக்குமே சர்ப்ரைஸ் தந்த பள்ளி கல்வித்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024-25 கல்வியாண்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருக்குமே சர்ப்ரைஸ் தந்துள்ளது தமிழக பள்ளி கல்வித்துறை.. விடுமுறையை அதிகம் விரும்பும் மாணவர்களுக்கு இந்த செய்தி திகைப்பை தர வாய்ப்பு உள்ளது. ஆசிரியர்களுக்கு இந்த கல்வியாண்டின் வேலை நாட்கள் ஆச்சர்யமானதாக இருக்க போகிறது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு 2024-25 புதிய கல்வியாண்டுக்கு பள்ளிகள் கடந்த ஜூன் 10-ந் தேதி திறக்கப்பட்டது. ஒருவாரம் பள்ளிகள் செயல்பட்ட நிலையில் பக்ரீத் பண்டிகை விடுமுறையால் கடந்த சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.

school teacher

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு தொடங்கியுள்ள நிலையில் முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி செயல்படும் நாட்கள், விடுமுறை, தேர்வு நடத்த வேண்டிய நாட்கள், நடப்பு கல்வியாண்டுக்கான செயல்பாடு குறித்து நாள்காட்டி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, ஜூன் மாதம் 15 நாட்கள், ஜூலையில் 23 நாட்கள், ஆகஸ்டில் 22 நாட்கள், செப்டம்பரில் 21 நாட்கள், அக்டோபரில் 21 நாட்கள், நவம்பரில் 23 நாட்கள் , டிசம்பரில் 18 நாட்கள், ஜனவரியில் 20 நாட்கள், பிப்ரவரியில் 22 நாட்கள், மார்ச் மாதத்தில் 22 நாட்கள், ஏப்ரலில் 13 நாட்கள் என மொத்தம் 220 நாட்கள் செயல்பட உள்ளது. பள்ளி தாமதமாக தொடங்கப்பட்டதால் மொத்த வேலை நாட்களை ஈடு செய்ய இந்த வருடம் 18 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 52 வாரங்களில் 18 வாரங்கள் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட போகிறது.

இது தவிர இன்னொரு விஷயமும் இருக்கிறது.. பொதுவாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், கன்னியாகுமரி, கடலூர் உள்பட வடகிழக்கு பருவமழையால் அதிக மழை மற்றும் பாதிப்பை சந்திக்கும் மாவட்டங்களில் நவம்பர், டிசம்பரில் மழை விடுமுறை என்றே தனியாக விடுமுறைவிடவேண்டிய நிலை உருவாகிறது. மற்ற மாவட்டங்களில் பெரிய பாதிப்பு என்றால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்.

ஆனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில (குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்) மழைக்காலங்களில் கனமழை பெய்தாலே விடுமுறைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஏனெனில் சென்னையின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் மழை வருடா வருடம் பதம் பார்த்துவிடுகிறது.. சென்னையில் கடந்த வருடம் மழை காரணமாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளிகள் முழுமையாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.

பொதுவாகவே 5 முதல் ஏழு நாட்கள் வரை மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடுமுறைவிடப்படுவது வாடிக்கையாக உள்ளது. சென்னையில உள்ள சாலைகள், மழை பெய்தால் பயணிக்கவே லாயக்கற்ற நிலைக்கு மாறுவதால், பெற்றோர்களும் மழை வந்தாலே விடுமுறை விடப்படுமா என்று எதிர்பார்க்கும் நிலை தொடர்கிறது. இந்த நிலையில் தான், மழை, தாமதமாக பள்ளிகள் திறப்பு போன்ற காரணங்களால் 18 சனிக்கிழமைகள் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+