ஆசிரியர்களுக்கு 19 நாள் சம்பள பிடித்தம்! பணப்பலனும் கிடையாது.. அரசுக்கு எதிராக போராடியதால் உத்தரவு
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும், சமவேலைக்கு சமஊதியம் கேட்டும் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்திய பள்ளி ஆசிரியர்களின் 19 நாளுக்கான சம்பளம் மற்றும் பிற பணப்பலன்களை பிடித்தம் செய்ய வேண்டும் என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு உள்ளதாகவும், இதை சரிசெய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றம் செய்யவில்லை.

இந்நிலையில் தான் சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் 19 ம் தேதி இடைநிலை அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் என்பது பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது.
இந்த போராட்டம் என்பது தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் நடந்தது. மாவட்ட வாரியாக போராட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம் பிப்ரவரி 8 ம் தேதி வரை நடந்தது. அதன்பிறகு தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தான் 19 நாட்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பிற பணப்பலன்களை பிடித்தம் செய்ய வேண்டும் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய முன்னறிவிப்பு இன்றி இந்த போராட்டத்தை ஆசிரியர்கள் மேற்கொண்டதால் 19 நாளுக்கான சம்பளம் மற்றும் பணப்பலனை பிடித்தம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணி பதிவேட்டில் பதிய வேண்டும். சம்பளம் மற்றும் பணப்பலன்களை ஒரே தவணையாக பிடித்தம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பிற மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications