No Special Class.. நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை! சிறப்பு வகுப்புகள் வைத்தால் கடும் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு நாளை முதல் விடப்படுகிறது. ஜனவரி 4-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்த நிலையில் அரையாண்டு விடுமுறை காலங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குனர் அதிரடியாக உத்திரப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் இன்றுடன் (டிசம்பர் 23ஆம் தேதியுடன்) நிறைவடைய உள்ளன.

பொதுவாக தேர்வுகள் முடிந்த உடனே அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த கல்வியாண்டில், பருவமழை மற்றும் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது.

Tamil Nadu School HalfYearly Holiday

அரையாண்டு விடுமுறை

இதனால் பாடத்திட்டம் மற்றும் வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அரையாண்டு விடுமுறையை குறைத்து, பள்ளிகளை விரைவாகத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியானது. குறிப்பாக, ஜனவரி 2ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தி மாணவர்களிடையே ஏமாற்றத்தையும் பெற்றோர்களிடையே கவலையையும் ஏற்படுத்தியது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த சூழலில்தான் ஏற்கனவே பள்ளி நாட்காட்டியில் நிர்ணயிக்கப்பட்டிருந்த விடுமுறை அட்டவணைப்படியே விடுமுறை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்த பிறகு, ஜனவரி 5ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். வழக்கமாக அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அதாவது, மூன்று நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில் அரையாண்டு விடுமுறை காலங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 24-12-2025 (புதன் கிழமை) முதல் 4-01-2026 (ஞாயிற்று கிழமை) வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5-01-2026 திங்கட் கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமையாசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களின் பாதுகாப்பு

பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். மாணவர்களின் வளர்ச்சிக்கு சமர்ச்சீரான உணவு அளிப்பது அவசியம்.

மாணவர் பாதுகாப்பு அறிவுரை

இசை, நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும். தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும். மேலும் பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள். அனைத்து பள்ளி தலைமையாசிரிகளும் மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+