இன்று தமிழக அரசு பள்ளிகள் திறக்கும் நிலையில்.. பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய முக்கிய மெசேஜ்.. கவனம்!
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பாக முக்கியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றைய தினம் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன. கொண்டாட்டமாக மாணவர்களை வரவேற்க முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பாக முக்கியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.

பள்ளிகளில் குழுக்களை தொடங்க வேண்டும்:
அதன்படி பள்ளிகளில் முறையாக மாணவர்களுக்கான என்சிசி, என்எஸ்எஸ் உள்ளிட்ட குழுக்களை உருவாக்க வேண்டும். புதிய ஆண்டிற்கான குழுக்களுக்கு மாணவர்களை நியமிக்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும்.
சீருடை உள்ளிட்ட ஒழுக்கங்களை சரி செய்ய வேண்டும்:
மாணவர்கள் சீருடை எடுத்து உள்ளார்களா என்று பார்க்க வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் சீருடை உள்ளதா என்பதை உறுதியை செய்ய வேண்டும். அது சரியான நிலையில் இருக்கிறதா, தூய்மை கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்
இணைய பாதுகாப்பு:
எல்லா மாணவர்களும் வீடுகளில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்களுக்கு இணையபாதுகாப்பை பழக்க வேண்டும். அவர்களுக்கு இணையத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்.. அதை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், தவறான தளங்களில் எப்படி மாட்டாமல் தவிர்க்க வேண்டும் என்பதை பழக்க வேண்டும்.
மாணவர்களுக்கு இலவசங்களை வழங்க வேண்டும்:
மாணவர்களுக்கு இலவசங்களை வழங்க வேண்டும். அதாவது இலவச பாட புத்தகம், பை, சீருடை ஆகியவற்றை முதல் நாளே தவறாமல் வழங்கிட வேண்டும். போதிய கையிருப்பு இல்லாத பட்சத்தில் அதை உடனடியாக மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் வர வேண்டும்:
ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிகளுக்கு வர வேண்டும். பி.இ.டி ஆசிரியர்கள் 30 நிமிடத்திற்கு முன்பாகவே பள்ளிகளுக்கு வர வேண்டும்.
பி.டி வகுப்பை எடுக்க கூடாது:
பி.இ.டி ஆசிரியர்கள் வகுப்புகளை பிற ஆசிரியர்கள் எடுக்க கூடாது. அந்த வகுப்புகளை பிற ஆசிரியர்கள் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க கூடாது.
விரைவில் துணை தேர்வு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த முறை தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர் . இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்.. மாணவியர்கள் 4.54 லட்சம் மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்கள் 3.57 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாணவிகள் தேர்ச்சி விகிதம் - 96.70% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 93.16% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணை தேர்வு நடக்க உள்ளது. தேர்வை 10 ஆயிரம் எழுதவில்லை. அவர்களுக்கும் ஜூன் 25ம் தேதி முதல் துணை தேர்வு நடக்க உள்ளது.
தேர்வு எழுதாதவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்கள் நேரில் சந்தித்து தேர்வு எழுத வைக்கப்படுவார்கள். தோல்வி அடைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தேர்வு எழுத வைக்கப்படுவார்கள், என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications