தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 4,276 பேருக்கு புதிய தொற்று
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,276 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 9,15,386 பேராக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,869 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாநிலம் முழுவதும் இன்று கொரோனாவிற்கு 4,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,15,386 பேராக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,869 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் இதன் மூலம் 8,72,415 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 30,131 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் 11 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,840 பேராக அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 260 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 84,658 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,99,30,436 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் போது சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் 427 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 398 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. திருவள்ளூரில் 199 பேருக்கும், திருப்பூரில் 154 பேருக்கும் தஞ்சாவூரில் 125 பேருக்கும் திருச்சியில் 131 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications