எம்.ஜி.ஆரின் வலது கரம்.. முதுபெரும் அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்- தலைவர்கள் இரங்கல்!
சென்னை: எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) முதுமையால் காலமானார். ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன் எனும் இராம.வீரப்பன், பேரறிஞர் அண்ணாவிடம் உதவியாளராக இருந்தார். பின்னர் தந்தை பெரியாரிடமும் உதவியாளராக இருந்தார். 1950களில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், சினிமா நிறுவனங்களைத் தொடங்கிய போது அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பாளரானார். 1963-ம் ஆண்டு எம்ஜிஆர் தாயார் சத்யா பெயரில் சத்யா மூவீஸ் எனும் திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன்.

எம்ஜிஆர், அண்ணா திமுக தொடங்கிய போது அவரது வலதுகரமாக அக்கட்சியில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழ்நாடு சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக, எம்.எல்.சியாக பதவி வகித்தார். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சக்திவாய்ந்தவராக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணியிலும் பின்னர் ஜெயலலிதா தலைமையில் ஒருங்கிணைந்த அண்ணா திமுகவிலும் பணியாற்றினார். ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த போது அவரது அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார் ஆர்.எம்.வீரப்பன்.

பின்னர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது எம்ஜிஆர் கழகத்தைத் தொடங்கினார். மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியுடன் அவர் மறையும் வரை மிக நெருக்கமான நட்பில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். இவரது எம்ஜிஆர் கழகம் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவு தந்துவந்தது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும் நெருங்கிய நட்பில் இருந்து வந்தார் ஆர்.எம்.வீரப்பன்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற பாட்ஷா திரைப்படம் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் தயாரிப்புதான். எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்த பல படங்களை சத்யா மூவீஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக முதுமையால் தீவிர அரசியலில் ஒதுங்கி இருந்தார் ஆர்.எம்.வீரப்பன். சென்னையில் இன்று முதுமை காரணமாக காலமானார். தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications