யார் வீட்டு பணமோ? 3600 கோடி அனாமத்தா தூங்குது! அதுவும் தமிழகத்தில் மட்டும்! ஆர்பிஐ சொன்ன ஷாக் தகவல்!
சென்னை: தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடியே 33 லட்சம் வங்கி கணக்குகளில் மொத்தம் 1600 கோடி ரூபாய் வரை உரிமை கோரப்படாத பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் கூறியுள்ளார். தற்போது தமிழ்நாடு முழுவதும் உரிமை கோராத கணக்குகளில் உள்ள பணத்தை திரும்பி ஒப்படைப்பதற்கான முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பல நிதி துறைகளில் மக்கள் வைத்திருந்த பல சேமிப்புகள் வருடங்கள் கடந்தும் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் இருப்பது போன்ற நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, 10 வருடங்களுக்கும் மேலாக செயல்படாத வங்கி கணக்குகள் மற்றும் கோரப்படாத வைப்பு தொகைகள் அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் மாற்றப்படும். இவ்வாறு தற்போது தமிழகத்தில் மட்டும் 1.33 கோடி கணக்குகளின் மொத்தம் ரூ.3,600 கோடி வரை உரிமை கோரப்படாத பணமாக இருப்பதாக ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல பொதுமேலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விவரங்களை அவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற 'உரிமை கோரப்படாத டெபாசிட் முகாம்' நிகழ்ச்சியில் பேசும் போது வெளியிட்டார். அக்.1 முதல் டிச. 31 வரை நாடு முழுவதும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து இந்த முகாம்களை நடத்தி வருகின்றன.
இதன் நோக்கம், கணக்குதாரர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் தங்களுக்கு உரிய பணத்தை எளிதாக மீட்டுக் கொள்ள உதவுவதாகும். வேலூர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் மட்டுமே, 2.80 லட்சம் கணக்குகளில் மொத்தம் ரூ.80 கோடி வரை கோரப்படாத பணம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஒரு கோடி ரூபாய் வரை தொகை இதுவரை மக்கள் கோரிக்கையின் பேரில் திருப்பி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டது.
உரிமை கோரப்படாத பணம் எப்படி உருவாகிறது என்ற கேள்விக்கு காரணங்கள் எளிதானவை. பல நேரங்களில் கணக்குதாரர்கள் வங்கி கணக்குகளை நீண்ட நாள் பயன்படுத்தாமல் விடுவார்கள். சிலர் வங்கியை மாற்றுவார்கள். சில சமயங்களில் கணக்குதாரர் காலமான பின், அவரின் குடும்பத்தினர் அந்தக் கணக்குகள் பற்றிய தகவலை அறியாமல் இருப்பார்கள். முகவரி மாற்றம், நகர்வு, ஆவணங்களைத் தேடி எட்ட முடியாத நிலை போன்ற காரணங்களால் பல கணக்குகள் செயல்படாமல் போகின்றன.
10 ஆண்டுகள் பரிவர்த்தனையில்லாமல் இருந்தால் அவை தானாகவே "உரிமை கோரப்படாத வைப்பு" என வகைப்படுத்தப்படும். அந்தத் தொகை ரிசர்வ் வங்கியின் DEAF (Depositor Education and Awareness Fund) எனப்படும் நிதிக்கு மாற்றப்படும். ஆனால் மிக முக்கியமானது என்னவெனில், இந்தப் பணம் கணக்குதாரரின் சொத்து என்ற நிலை மாற்றமில்லை. கணக்குதாரர் உயிருடன் இருந்தால் அவர் தானே கோரலாம். அவர் இறந்திருந்தால், அவரின் சட்டபூர்வ வாரிசுகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து எந்த நேரத்திலும் பெறலாம்.
இன்று தொழில்நுட்ப முன்னேற்றத்தால் உரிமை கோரப்படாத பணத்தைத் தேடுவது மிக எளிதாகி வருகிறது. அனைத்து வங்கிகளின் இணையதளங்களிலும் இதற்காக தனி வசதி உள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள UDGAM Portal (https://udgam.rbi.org.in) மூலம் ஒரே இடத்தில் பல வங்கிகளின் கணக்குகளை அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
கந்தலாகி போகும் ரூபாய் நோட்டுகள்.. வர போகுதா பிளாஸ்டிக்? பரபரப்பைக் கிளப்பிய மெசேஜ்! பறந்த விளக்கம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications