Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபாநாயகரே கேள்வி கேட்டு.. இப்போதான் பார்க்கிறேன்.. அப்பாவு செய்த சம்பவம்.. சட்டென எழுந்த துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் காரணமாக அவையில் நடந்த விவாதத்திற்கு இடையே இன்று சட்டசபையில் இன்னொரு சுவாரசியமான விவாதமும் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டசபை பெரும் அமளியாக இருந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த விவகாரம்தான் இத்தனை மரணங்களுக்கு காரணம். இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 52ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

appavu mk stalin tn assembly

சாராய விற்பனை: கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 50 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

அதிமுக புறக்கணிப்பு: இன்று சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு முன்னதாக அதிமுக அவையில் அமளி செய்து புறக்கணித்தது. கள்ளச்சாராய விவகாரம் பற்றி கோஷம் எழுப்பிய நிலையில் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை என அதிமுக அறிவிப்பு வெளியிட்டது. மேலும் சட்டமன்றத்தில் இருந்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியே புறப்பட்டார்.

முதல்வர் ஸ்டாலின்; ஆனால் முதல்வர் ஸ்டாலின், மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதலமைச்சர். விவாதத்தில் அதிமுகவினர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்., என்று கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயகர் அனுமதித்தும் அதிமுகவினர் மீண்டும் வரவில்லை.

சுவாரசிய விவாதம்; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் காரணமாக அவையில் நடந்த விவாதத்திற்கு இடையே இன்று சட்டசபையில் இன்னொரு சுவாரசியமான விவாதமும் நடைபெற்றது.

அதன்படி அதிமுக வெளியேறிய பின் அவையில் கேள்வி நேரம் தொடர்ந்து நடந்தது. கேள்வி நேரத்தில் சபாநாயகர் அப்பாவு திடீரென கேள்வி எழுப்பினர். அப்போது, அமைச்சரிடம் சபாநாயகர் சார்பாக ஒரு கேள்வி உள்ளது. முதல்வரின் உங்கள் தொகுதி திட்டத்தின் கீழ் திசையன்விளை தொகுதியில் மாஜிஸ்திரேட் கோர்ட் அமைக்கப்படுவதாக கூறி உள்ளீர்கள். இதற்காக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அது எப்போது நிறைவேற்றப்படும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன், என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

இதற்கு அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், சபாநாயகரே கேள்வி கேட்டு இன்றைக்குத்தான் பார்க்கிறேன். கேள்வி நேரத்தில் சபாநாயகர் ஒருவர் முதல்முறை கேள்வி கேட்கிறார் என்றார்.

இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, எனக்கும் தொகுதி மக்கள் ஓட்டு போட்டுருக்காங்க, தொகுதிக்காக கேட்கணும்ல என்று பதில் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+